தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17, 19 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, அக்டோபர் 17 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில், திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது. அதன் பின், திமுக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் - சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன் நிறைவில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, வார்டு 02, 03, 04, 07, 08, 10 ஆகிய ஆறு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அதனைத் திறந்து வைத்து, தேர்தல் பணிகளைத் துவக்கி வைத்தார்.
|