காயல்பட்டினம் நகராட்சியின் மூலம், தீவுத்தெரு - தைக்கா தெரு ஆகிய தெருக்களில், சீரமைப்பு (Patch Work) முறையில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விரு சாலைகளும், ஏற்கனவே நடத்தப்பட்ட நகர்மன்றக் கூட்டத்தின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டவையாகும்.
Patch Work முறையில் அமைக்கப்பட்ட சாலைகள் என்பதால், இவை நிரந்தர சாலை அமைக்கப்படும்போது செய்வது போல பழைய சாலையைத் தோண்டியகற்றி அமைக்காமல், இருந்த சாலையில் மேற்பரப்பிலேயே தார் கலந்த ஜல்லி கொட்டப்பட்டு, சாலை அமைக்கப்பட்டுள்ளது.
|