காயல்பட்டினத்தில், நகராட்சியின் சார்பில் - இரண்டாம் பைப்லைன் திட்டத்திற்காக, அனைத்து தெருக்களிலும் குடிநீர் வினியோகக் குழாய் பதிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் சதுக்கைத் தெருவில் குழாய் பதிக்கப்பட்டது. தற்போது கி.மு.கச்சேரி தெருவில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இவ்விரு தெருக்கள் உட்பட பல தெருக்களில் சாலைகள் சிமெண்ட் சாலையாக உள்ளதால், குழாய் பதிப்பதற்காக அவற்றைத் தோண்டுவதற்குள் பணியாளர்கள் பெரும்பாடுபட்டு விடுகின்றனர்.
அமெரிக்கர் எவருடைய தலையையாவது துளைத்துவிடுமோ என அஞ்சும் அளவுக்கு, நெம்புகோல் (அளவாங்கு - கடப்பாறை) கம்பி பொருத்தப்பட்ட துளையிடும் (ட்ரில்லிங்) கருவியைக் கொண்டு, பலமான அழுத்தத்துடன் சாலையைத் துளையிட்டுப் பெயர்த்து, பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.
இதுவே - தார் சாலைகளில் இதுபோன்ற பணிகள் செய்யப்படும்போது, இலகுவாகத் தோண்டி குழாய் பதிப்பதும், பின்னர் சீரமைப்பு (பேட்ச் வர்க்) முறையில் பள்ளங்கள் சரிசெய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
|