ஆசிய பசிஃபிக் மருத்துவ இதழ் ஆசிரியர் கழகத்தின் சார்பி், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் நடத்தப்பட்ட கருத்தரங்கில், காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை ஆசிரியர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் உரை நிகழ்த்தியுள்ளார். விரிவா விபரம் வருமாறு:-
2016-ஆம் ஆண்டிற்கான ‘ஆசிய பசிபிக் மருத்துவ இதழ் ஆசிரியர்கள் கழகத்தின் (Asia Pacific Association of Medical Journal Editors, சுருக்கமாக APAME)’ வருடாந்திர கருத்தரங்கு (APAME 2016 Convention), தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் ’செண்டரா கிராண்ட் (Cenatara Grand)’ எனும் நட்சத்திர விடுதியில், ஆகஸ்ட் 27-28 தேதிகளில் நடைபெற்றது.
20 அயல்நாட்டு பேச்சாளர்கள் உட்பட 170 பேர் பங்கேற்ற இக்கருத்தரங்கை, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான பேராசிரியர் டாக்டர் பியசகொல் சகொல்சடயடோர்ன் (Prof Dr piyasakol sakolsatayadorn) தலைமையேற்று துவக்கி வைத்தார்.
இதன் பயிற்சிப் பட்டறை ஒன்றில் சிறப்பு பேச்சாளராக உரையாற்ற, காயலர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் அழைக்கப்பட்டிருந்தார். மருத்துவ எழுத்தாளரும், இயற்கை ஆர்வலரும், காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை ஆசிரியர்களுள் ஒருவருமான அ.ர.ஹபீப் இப்றாஹீம் இவர், காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சேர்ந்த அப்துர் ரஸ்ஸாக் என்பவரது மகன் ஆவார்.
பெங்களூரை சார்ந்த மருத்துவ இதழியல் துறை நிபுணர், டாக்டர் சாம் மேத்யூ அவர்களுடன் இணைந்து, ’ஆராய்ச்சி கட்டுரைகளை மருத்துவ இதழ்களில் திறம்பட எழுதுதல் மற்றும் செம்மையாக முன்னிடுதல் (Effective Publication Writing and Research Presentation)’ என்னும் தலைப்பில் உரையாற்றிய இவர், மருத்துவ இதழியல் உத்திகளையும் அத்துறையின் தற்போதைய வளர்ச்சி குறித்தும் விவாதங்கள், கேள்வி-பதில், எடுத்துக்காட்டுகள் மற்றும் படங்களுடன் கூடிய செயல்முறை பயிற்சிகளின் மூலமாக விளக்கினார்.
இந்நிகழ்ச்சியின் முதலாம் நாள், உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளின் 15 பிரிதிநிகள் பங்கேற்ற, உடல் நலம் மற்றும் மருத்துவம் சார்ந்த இதழ்களின் மின்-காப்பகமான ”Index Medicus for South-East Asia Region (IMSEAR)” தொடர்பான கூட்டத்திலும் இவர் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இக்கருத்தரங்கின் இறுதியில், அடுத்த ஆண்டிற்கான நிகழ்வு (APAME 2017 Convention), லாவோஸ் நாட்டில் உள்ள லுாங்க் பிரபாங் (Luang Prabang, Laos) எனும் நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. |