தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் ஏழை மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக, தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டு வருகிறது. அந்த நிதியுடன், அரசு சார்பில் வழங்கப்படும் 20 லட்சம் ரூபாய் நிதியையும் சேர்த்து, மொத்தம் 30 லட்சம் ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வகைக்காக, துபை காயல் நல மன்றம் சார்பில் - அதன் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ அளித்த 1 லட்சம் ரூபாய் நிதியை, அதன் உள்ளூர் அமைப்பான காயல் துபை நல மன்றத்தின் தலைவர் லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் முன்னிலையில், மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க நிர்வாகி அ.வஹீதாவிடம் 10.10.2016. திங்கட்கிழமையன்று கையளித்தார். துபை காயல் நல மன்றத்தின் பிரதிநிதி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ் இதன்போது உடனிருந்தார்.
|