காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், “இதுதான் நகராட்சி” எனும் தலைப்பில் - ஒரு நகராட்சியின் கட்டமைப்பு, அதிலுள்ள ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், தலைவர் & உறுப்பினர்களது பொறுப்புகள் - கடமைகள் என்னென்ன என்பனவற்றை விளக்கி முதல் பக்கத்திலும், மறுபக்கத்தில் - முதல் பக்க வாசகங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்விகளும் கேட்டு - ரூ. 10 ஆயிரம் பணப்பரிசும், சிறப்புப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டு - இரு பக்க பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது.
இப்பிரசுரம், நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் தொழுகை நிறைவுற்ற பின், பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. பிரசுரத்தை நேரடியாகப் பெற்று - அதிலுள்ள கேள்விகளைப் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டிய இடமாக நகரின் சில வணிக நிறுவனங்களது பெயர்களும் அப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, ஏராளமான பொதுமக்கள் சரியான விடைகளைப் பூர்த்தி செய்து, பிரசுரங்களை சமர்ப்பித்திருந்தனர். அவர்களுள், பரிசுக்குரியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான குலுக்கல், காயல்பட்டினம் பெரிய தெருவிலுள்ள - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் தற்காலிக அலுவலகத்தில், 08.10.2016. சனிக்கிழமை 17.30 மணியளவில் நடைபெற்றது.
குலுக்கலின் நிறைவில், தலா 1000 ரூபாய் வீதம் மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசைப் பெற பின்வருமாறு பரிசுக்குரியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
(01) எஸ்.என்.அப்துல்லாஹ், 40/32A ஆறாம்பள்ளித் தெரு
(02) எம்.எச். முஹம்மத் ஹஸன், 57/16 புதுக்கடைத் தெரு
(03) எம்.எஸ்.ரிஸ்வான், 40/32A ஆறாம்பள்ளித் தெரு
(04) ஏ.கே.முஹம்மத் மீரா ஸாஹிப், 68A கீழ நெய்னார் தெரு
(05) டபிள்யு.எம்.மர்யம் ஆயிஷா, 126 கீழ நெய்னார் தெரு
(06) கே.எஸ்.அஹ்மதா, 202 நெய்னார் தெரு
(07) எம்.எம்.ஆமினா முஸ்ஃபிரா, 42 கே.டீ.எம். தெரு
(08) எம்.ஓ.எஸ்.அப்துர் ரஹீம், 38/169 தைக்கா தெரு
(09) அபூ கனீ, 3A சிவன் கோவில் தெரு
(10) கே.ஏ.மைமூன் கதீஜா, 71/17 மரைக்கார் பள்ளித் தெரு
தொடர்ந்து நடைபெற்ற குலுக்கலில், சிறப்புப் பரிசுக்குரியோராக - பின்வருமாறு 25 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
(01) மு.அ. ஹமீத் மனாஸ், 41/A2 சின்ன நெசவுத் தெரு
(02) எம்.பி.முஹம்மத் யூஸுஃப் மவ்லானா, 143/82 தைக்கா தெரு
(03) எம்.இ.ஃபாத்திமா நூஹ், 118 ஆறாம்பள்ளித் தெரு
(04) யு.யூஸுஃப், 28F மருத்துவர் தெரு
(05) எம்.ஐ.உம்மு ஹானீ, 87A அலியார் தெரு
(06) நூஹ் நுஃபைஸ், 142 தீவுத் தெரு
(07) அப்னான் இப்ராஹீம், 192 மரைக்கார் பள்ளித் தெரு
(08) பீவி லெப்பை, 100 தைக்கா தெரு
(09) எஸ்.சம்ஸ் நிஸா, 59 மருத்துவர் தெரு
(10) எல்.ஆர்.ஏ.மஹ்மூத் முஷாஹித், 45 ஹாஜியப்பா தைக்கா தெரு
(11) எஸ்.ஏ.ஏ.ஹலீம், 276 மரைக்கார் பள்ளித் தெரு
(12) ஏ.கே.உமர் லெப்பை, 28F மருத்துவர் தெரு
(13) ஜெஸீமா, 140 தீவுத்தெரு
(14) கே.ஆர்.கதீஜா, 184/79 கே.டீ.எம். தெரு
(15) எஸ்.எல்.ஜாஃபர் ஸாதிக், 173 அலியார் தெரு
(16) ஏ.கே.தாஹிரா நளீஃபா, 87B அலியார் தெரு
(17) எஸ்.எஸ்.ஏ.காதிர், 89A கே.டீ.எம். தெரு
(18) காஸிம் ஹில்மீ, 42B கே.டீ.எம். தெரு
(19) என்.எல்.காதர் பீவீ, 292 முத்தாரம்மன் கோவில் தெரு
(20) ரஹ்மத் நிஸா, 10A/3 எல்.எஃப்.வீதி
(21) எம்.ஃபாரூக், 30 தீவுத்தெரு
(22) எம்.எப்.ஜீனத், 86 பரிமார் தெரு
(23) எம்.எஸ். ஷாஃபிஈ ஸஈத், 34 ஆஸாத் தெரு
(24) பி.எஸ்.ஓ.அஜீபா, 82 பி புதுக்கடைத் தெரு
(25) எம்.எஸ். முத்து கதீஜா, 231/96 கே.டீ.எம். தெரு
பரிசளிப்பு விழா, 09.10.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 17.30 மணியளவில், காயல்பட்டினம் கடற்கரை நுழைவாயில் முன்பு நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை தாங்கினார். “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், பொதுநல ஆர்வலர்களான எஸ்.ஏ.முஹ்யித்தீன், ‘மாஷாஅல்லாஹ்’ செய்யித், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெண்களுக்குத் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. அங்கு, பொதுநல ஆர்வலர்களான எம்.ஜி.நஸ்பர் ஹமீத், அஹ்மத் நாச்சி, தஸ்லீமா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும உறுப்பினர்களான நோனா அபூ ஹுரைரா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, அஹ்மத் சுலைமான் வரவேற்புரையாற்றினார்.
“நடப்பது என்ன?’ சமூக ஊடகக் குழுமத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, பரிசுக்குரியோரை அறிவிக்க, விழா தலைவரும் - முன்னிலை வகித்தோரும் அவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.
முதல் 10 பேருக்கு தலா 1000 ரூபாய் வீதம் 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும், அடுத்த 25 பேருக்கு - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட பயணப் பையும் (Travel Bag) பரிசுகளாக வழங்கப்பட்டன.
நன்றியுரை, துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இவ்விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் அங்கத்தினரான சாளை நவாஸ், எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஏ.எஸ்.புகாரீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், எம்.என்.அஹ்மத் ஸாஹிப், எம்.எம்.முஜாஹித் அலீ, எஸ்.அப்துல் வாஹித், ஜஃபருல்லாஹ், அஹ்மத் சுலைமான், ரியாஸ், சித்தீக், எம்.ஏ.காழி அலாவுத்தீன் (TAS), மரைக்கார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
எஸ்.கே.ஸாலிஹ்
செய்தி தொடர்பாளர்
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்
காயல்பட்டினம். |