காயல்பட்டினம் - சொளுக்கார் தெரு - மவ்லானா அப்பா சின்ன கல் தைக்கா வளாகத்தில் இயங்கி வரும் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, 23.10.2016. ஞாயிற்றுக்கிழமையன்று, பல்சுவை சன்மார்க்கப் போட்டிகளுடன் நடைபெறவுள்ளது. இவ்விழாவில், 41 மாணவியர் ‘ஆலிமா முஅஸ்கரிய்யா’ பட்டம் பெறவுள்ளனர்.
இதுகுறித்து, அக்கல்லூரியின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வெளியிட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி தஆலா வபரகாத்துஹு. அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். தென்னிந்திய காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியின் விழா அறிவித்தல்,
அன்பிற்கினிய பெருமக்களே! நமது முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 23-10-2016 ஞாயிற்று கிழமை நடைபெற உள்ளது. அவ்வமயம்...
>>> 41 மாணவிகள் ஆலிமா முஅஸ்கரிய்யா ஸனதையும்
>>> 8 பேர் ஹாஃபிழா ஸனதையும் பெற இருக்கிறார்கள்.
* ஹிப்ழ் போட்டி
** தர்தீல் போட்டி
*** Quiz வினா-விடை
****பேச்சு போட்டி
ஆகிய போட்டிகளும், பல்வேறு அறிவு சுரங்க நிகழ்ச்சிகளும் மாணவியரால் நடத்தப்படவுள்ளன.
இதன் முன்னோடியாக எதிர் வரும் 17-ம் தேதி அன்று....
>>> இரண்டு ஹாஃபிழாக்கள் தனித்தனியாக முழு குரானையும் ஒரு பகலில் மனனமாக ஓதி முடிக்க உள்ளனர்.
அத்துடன்....
>>> 13-வயதே நிரம்ப பெற்ற ஒரு ஹாஃபிழா மாணவி பார்வையாளர்களால் வாசிக்கப்படும் குரானின் எப்பகுதியிலிருந்தும் தமிழ் மற்றும் ஆங்கில பொருளை அதாவது தர்ஜுமாவிற்கு அதற்கான குர்ஆன் வசனத்தை உடனுக்குடன் மனனமாக ஓதக்கூடிய சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது
இவ்வுயரிய நிகழ்ச்சிகள் யாவும் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று நிறைவுபெறவும், மத்ரஸாவின் வளர்ச்சி மேலோங்கவும் தங்களின் நிறைவான துஆவையும், ஒத்துழைப்பையும் தந்திட அன்புடன் வேண்டுகிறோம். வல்ல அல்லாஹ் யாவருக்கும் நீடருள்பாளிப்பானாக, ஆமீன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |