இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களது கூட்டத்தாரையும் எதிரிகளிடமிருந்து இறைவன் காப்பாற்றிய நாள் முஹர்ரம் 10 என்ற வரலாற்றை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் முஹர்ரம் மாதம் 09, 10 நாட்களில் முஸ்லிம்கள் நோன்பு நோற்பது வழமை.
நடப்பாண்டில், அக்டோபர் 10, 11ஆம் நாட்களில் முஹர்ரம் 09, 10 நாட்களாகக் கொண்டு, காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில் அவ்விரு நாட்களிலும் மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேரீத்தம்பழம், தண்ணீர், கஞ்சி, வடை வகைகள் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்ட இந்நிகழ்வில், அந்நாட்களில் நோன்பு நோற்றிருந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அக்டோபர் 10ஆம் நாளன்று நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் படக்காட்சிகள்:-
|