காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்ப வானிலை பல மாதங்களாக நிலவி வருவதால், நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாகக் குறைந்துள்ளது. மழை பெய்யாததால் காயல்பட்டினம் உள்ளிட்ட பல ஊர்களில் பொதுமக்களுக்கு அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதற்கான பிரார்த்தனை நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே துவங்கியுள்ளன.
இவ்வாறிருக்க, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில், இன்று நடைபெற்ற ஜும்ஆ தொழுகையை வழிநடத்திய அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஜும்ஆ தொழுகையில், மழை வேண்டி குனூத் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார்.
மழைப் பிரார்த்தனையை உள்ளடக்கிய இத்தொழுகையில் சுமார் ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பில், நாளை (15.10.2016. சனிக்கிழமை) காலை 07.30 மணிக்கு, குட்டியாப்பள்ளி மைதானத்தில் - மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடத்தப்படவுள்ளது.
தகவல் உதவி (குட்டியா பள்ளி):
(ஹாங்காங்கிலிருந்து...)
ஹாஃபிழ் A.R.அஹ்மத் நூஹ் |