காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், நகரில் இயங்கி வரும் சுய உதவிக் குழுக்களுக்கு - தொழில் ஊக்குவிப்பிற்காக கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், 31.10.2016.க்குள் விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படும் என்றும், இதர கடன் வகைகள் வழமை போல வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பைத்துல்மால் அமைப்பின் செப்டம்பர் மாத அறிக்கையின் படி, சாதாரண கடன் உதவியாக 12 பேருக்கு 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜகாத் கடனுதவியாக 5 பேருக்கு 16 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பாக...
தகவல்:
M.A.சிந்தா மதார் |