முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளிட்ட சட்டங்களைத் திரும்பப் பெற்று, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நடுவன் பாஜக அரசு திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கெதிராக, SDPI கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் காயல்பட்டினத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிப்பு நடைபெற்று வருகிறது.
17.10.2016. அன்று 17.00 மணிக்குத் துவங்கி, 20.00 மணி வரை முதற்கட்ட கையெழுத்து சேகரிப்பு, காயல்பட்டினம் கடற்கரை நுழைவாயில், எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, அரூஸிய்யா பள்ளி வளாகம், இக்ராஃ கல்விச் சங்க அலுவலகம் அருகில், தாயிம்பள்ள வணிக வளாகம், கி.மு.கச்சேரி தெரு, சதுக்கைத் தெரு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வமுடன் படிவங்களில் கையெழுத்திட்டனர்.
கையெழுத்து சேகரிப்பு முகாமை விரிவுபடுத்தி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆண் - பெண் தன்னார்வலர்கள் வரவேற்கப்படுவதாகவும், விருப்பமுள்ளோர், அதற்கான பொறுப்பாளர் ஷம்சுத்தீனை (தொடர்பு எண்: +91 98948 61588)த் தொடர்புகொள்ளுமாறும் அக்கட்சியின் நிர்வாகிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
|