ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், வரும் நவம்பர் மாதம் 04ஆம் நாளன்று நடைபெறவுள்ளதாக, அதன் செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அபூதபீ காயல் நல மன்றத்தின் 43ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 23-09-2016 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் M.S முஹம்மது உமர் அவர்களின் தலைமையில் பொதுச்செயலாளர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் மற்றும் பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோரது இல்லத்தில் வைத்து கூடியது.
கவுரவத் தலைவர் ஹாஜி ஐ.இம்தியாஸ் அஹ்மத் அவர்கள் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்கள்.
மன்றத்தின் 9ஆவது பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த (9ஆவது) பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று வெகு சிறப்புடன் நடத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நிகழ்விடம் மற்றும் பொதுக்குழு இதர காரியங்கள் முடிவான பிறகு தனி அழைப்பு செய்தியாக வெளியிட முடிவு செய்யப்பட்டது.
வெள்ளிவிழா கண்ட K.M.T. மருத்துவமனைக்கு வாழ்த்துக்கள்:
வெள்ளிவிழா கண்ட நமது ஊரின் K.M.T. மருத்துவமனை 25 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து கனவுகளோடும், பல திட்டங்களோடும், பொதுநல நோக்குடன் அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் நிறுவப்பட்ட இந்த மருத்துவமனை 25 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வருவது மிகப்பெரிய சாதனை, வெள்ளிவிழா கண்ட K.M.T. மருத்துவமனைக்கு எம் அபுதாபி காயல் நலமன்றம் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு கே.எம்.டி.மருத்துவமனையின் பல குறைபாடுகள் மன்ற உறுப்பினர்களால் முன் வைக்கப்பட்டது. மருத்துவப்பணி மிகவும் கடினமானது என்றாலும் மருத்துவமனையின் நியாயமான குறைபாடுகளை களைந்து இக்குறைகளுக்கு முழுமையான நிரந்தர தீர்வு காண்பதியின் மூலம் K.M.T. மருத்துவ மனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதின் அவசியத்தை உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டார்கள்
இரங்கல் தீர்மானம்:
அண்மையில் காலமான - ஹாஜியப்பா தைக்கா தெரு எல்.கே.காலனியைச் சேர்ந்த ஐக்கிய விளையாட்டு சங்கம், எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகியவற்றின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எல்.கனீ அவர்களின் மனைவியும் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சகோதரர்களான செய்து இப்ராஹிம் மற்றும் ஷேக்னா லெப்பை ஆகியோர்களின் பெரிய தாயார் எல்.கே.எஸ்.எல்.ஜைனப் அவர்கள் மற்றும் மகுதூம் தெருவைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை மூத்த தலைவரும் மன்ற பொதுச்செயலாளர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் அவர்களின் மாமனாரும் ஆகிய விளக்கு முஹம்மத் அப்துல் காதிர் அவர்கள் மேலும் கே.டீ.எம். தெரு தாயிம்பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட மஜ்லிஸுல் கவ்து சங்கம் & சீதக்காதி நினைவு நூலகத்தின் தலைவரும், இஸ்லாமிய தமிழிலக்கிய மாமன்ற அமைப்பாளரும், எழுத்தாளரும், ஓவிய ஆசிரியருமான கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா, ஆகியோர்களின் மறைவுக்கு இக்கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, அன்னவர்களின் மஃக்ஃபிரத்திற்காக (பாவப் பிழை பொறுப்பிற்காக) துஆ பிரார்த்தனை செய்யப்பட்டது.
பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை குறித்து கலந்து ஆலோசிக்கவும்,அரசு பொது நூலகத்தின் மூலம் பெறப்பட்ட பத்து இருக்கைகள் மற்றும் ஒரு வட்ட வடிவ மேசைக்கான (Round Table with 10 Chairs) நிதி உதவி இன்ஷாஅல்லாஹ் அடுத்த செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என்று மன்றத்தின் தலைவர் ஜனாப் V.S.T. ஷேக்னா லெப்பை அவர்கள் அறிவிக்க துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு செயலர்)
படங்கள்:
எம்.ஓ.அன்ஸாரீ
(இணைப் பொருளாளர்)
|