காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளின் உறுப்பினர் பொறுப்பிடங்களுக்கு, வரும் அக்டோபர் மாதம் 17ஆம் நாளன்று தேர்தல் நடைபெறவுள்ளது.
“நகராட்சியில் மக்களாட்சி” எனும் முழக்கத்துடன் இயங்கும் - காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், இப்பொறுப்பிடங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளரிடம் இருக்க வேண்டிய தகுதிகள், தர வேண்டிய வாக்குறுதிகள், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுவின் ஆதரவைக் கோரும் விண்ணப்பப் படிவம் ஆகியன இன்று 21.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்குழும நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
------------------------------------------------------
நகராட்சியில் மக்களாட்சி - நடப்பது என்ன? வேட்பாளர்கள் ஆதரவு ஆவணம்
------------------------------------------------------
நடப்பது என்ன? சமூக ஊடக குழும அங்கத்தினர்களே,
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!
அக்டோபர் 17, 2016 அன்று காயல்பட்டினம் நகராட்சிக்கு தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தல்கள் மூலம் - ஊழலற்ற, லஞ்சத்திற்கு எதிரான, கண்ணியமான காயல்பட்டினம் நகர்மன்றம் உருவாகிட - நேர்மையான நகர்மன்ற உறுப்பினர்கள் தேவை.
நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் ஏற்பாட்டில் - செப்டம்பர் 14, 2016 அன்று நடைபெற்ற "நகராட்சியில் மக்களாட்சி" என்ற தலைப்பிலான கலந்துரையாடல்கள் வாயிலாக பெறப்பட்ட ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டு, நாம் தேர்வு செய்யவேண்டிய வேட்பாளர்களின் அடிப்படை தகுதி மற்றும் அவர்கள் வாக்காளர்களுக்கு அளிக்கவேண்டிய உறுதிமொழிகள் தயாரிக்கப்பட்டு, தற்போது வெளியிடப்பட்டுள்ளது:-
இந்த ஆவணத்தில் உள்ள தகுதிகளை கொண்ட மற்றும் கோரப்பட்டுள்ள வாக்குறுதிகளை வழங்கும் வேட்பாளர்களுக்கு நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் ஆதரவு தெரிவித்து, அவர்களின் வெற்றிக்கு - இறைவன் நாடினால் - களப்பணியாற்றும்.
இந்த ஆவணத்தைப் பெற விரும்புவோர் கீழ்க்காணும் குழும அட்மின்களை தொடர்புகொள்ளவும்:
(1) கே.ஏ. முஹம்மது நூஹு (+91 73395 38097)
(2) எஸ்.ஏ. முஹம்மது நூஹு (+91 78455 40490)
(3) சாளை நவாஸ் (+91 82203 12630)
இதில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை - தாமாகவே பதிவிறக்கம் செய்து அச்சிட்டும், அட்மின்களிடம் வழங்கலாம்.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய அக்டோபர் 03 இறுதி நாள் என்பதாலும், அதற்கு முன்னர் வேட்பாளர்களை இறுதி செய்யவேண்டியுள்ளதாலும், நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை - செப்டம்பர் 28 புதன்கிழமைக்குள், திரும்ப வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
எஸ்.கே.ஸாலிஹ்
செய்தி தொடர்பாளர்
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்
காயல்பட்டினம்.
|