காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், “இதுதான் நகராட்சி” எனும் தலைப்பில் - ஒரு நகராட்சியின் கட்டமைப்பு, அதிலுள்ள ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், தலைவர் & உறுப்பினர்களது பொறுப்புகள் - கடமைகள் என்னென்ன என்பனவற்றை விளக்கி முதல் பக்கத்திலும், மறுபக்கத்தில் - முதல் பக்க வாசகங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்விகளும் கேட்டு - ரூ. 10 ஆயிரம் பணப்பரிசும் அறிவிக்கப்பட்டு - இரு பக்க பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பிரசுரத்தை நேரடியாகப் பெற்று, அதிலுள்ள கேள்விகளைப் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டிய இடமாக நகரின் சில வணிக நிறுவனங்கள் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசுரம் கிடைக்கப்பெறாதவர்கள், மேற்படி வணிக நிறுவனங்களில் கேட்டுப் பெற்று, பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் & படங்கள்:
எஸ்.கே.ஸாலிஹ்
செய்தி தொடர்பாளர்
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம்
காயல்பட்டினம். |