முதலிடத்துக்கான சண்டையில் முதல்வர் posted bymackie noohuthambi (kayalpatnam )[21 September 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44645
மர்ஹூம் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு எனக்கு இருந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
மொகுதூம் பள்ளியில் தொழுகைக்கு முன் அணியில் முதலாவதாக நிற்க வேண்டும் என்ற அவாவில் ஓடி வந்து நிற்பார்கள். நோன்பு திறக்கும் காலங்களிலும் அவருக்கு அலாதியான இடம் இருக்கும். அந்த இடத்தை வேறொருவர் ஆக்கிரமித்தாலும் அவருக்கு கோபம் வரும். அப்படி எல்லா இடத்திலும் முன்னணியில் நிற்க வேண்டும் என்ற அவர் ஆசைக்கு இணங்க விடாமல் அவரை தடுக்கும்போது எங்களுக்குள் வாக்கு வாதமும் வரும்.
இந்த இணையத்தளத்தில் மிதி வண்டி சுற்றுப் பயணம் வந்தவர்களை நமதூர் கடற்கரையில் வரவேற்றுப் பேசிய செய்தியை நேற்றுப் படித்தேன். ஆனால் நமதூரில் மிதி வண்டியிலேயே எல்லா இடத்துக்கும் சென்று வருபவர் இவராகத்தான் இருக்கும், ஒரு இரவு வேளையில் அவர் அப்படி சென்றபோது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதால் இவருக்கு ஏற்பட்ட உபாதை மீண்டும் அவரை அந்த மிதி வண்டியில் போக முடியாமல் தடுத்து விட்டது.
ஒரு சில மாதங்களுக்கு முன் அவரது மகனார் மிஸ்கீன் சாஹிப் ஹாபிசா அவர்கள் அவரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்ற போது படுத்த படுக்கையிலும் எனது குரலை அடையாளம் கண்டு சுகம் விசாரித்துக் கொண்டார். அவருக்கு அவரது மகன் சோறு ஊட்டிய நிகழ்ச்சி என் கண் முன்னால் வந்து செல்கிறது. தாய் மகனுக்கு சோறு ஊட்டுவதை பார்த்திருக்கிறேன். மகன் தன் வயதான தந்தைக்கு சோறு ஊட்டி மகிழ்வதை அன்றுதான் பார்த்தேன். மாஷா அல்லாஹ் நல்லதொரு அக்ஹ்லாக் உள்ள பிள்ளைகளை மருமக்களை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்ற மன நிறைவு ஏற்பட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது நல்லமல்களை கபூல் செய்வானாக. அவர்களது பிழைகளை பொறுத்து மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross