செய்தி: காயல்பட்டணம்.காம் எழுத்து மேடை மூத்த ஆசிரியர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா காலமானார்! செப். 23 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...சேவையின் மறுபக்கம் சந்தோஷமா சங்கடமா? posted bymackie noohuthambi (kayalpatnam )[22 September 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44668
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சுகவீனமுற்றவர்களை உடனே சென்று பார்க்க வேண்டும் என்ற விஷயம் எவ்வளவு சத்தியமானது.
மாமா அவர்களை சந்தித்து விட்டு என் மகன் வந்து என்னிடம் சொன்னபோது இப்போது போவோம் அப்போது போவோம் என்று அலட்சியமாக இருந்து விட்டேனே என்று வருத்தமாக உள்ளது.
''சேவையின் மறுபக்கம் சந்தோஷமா சங்கடமா?'' என்று இந்த இணையத்தளத்தில் அவர்கள் பதிவு செய்திருக்கும் விஷயங்களை மீண்டும் படித்துப் பார்த்தாலே போதும் அவர்கள் நமது இளைஞர்களை வேலைக்கு சேர்த்து விட்டு ஆளாக்கிய சந்தோசமான செய்தியும் சில இளைஞர்களை வேலைக்கு சேர்த்து விட்டு அவர்கள் பட்ட சங்கடங்களையும் மிக நேர்த்தியாக வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள். அதை பற்றி நான் அவர்களுடன் பேசினேன். எனக்கும் இது போன்ற அனுபவங்கள் இப்போதும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் உங்கள் உதவிகளுக்கு மத்தியில் அது ஒரு தூசிதான் என்றேன்.
என்ன என் கட்டுரைகளுக்கு உனது விமர்சனங்களை காணோமே. நான் உனது கமெண்ட்ஸ்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் என்பார்கள்.
அவர்கள் சீதக்காதி நினைவு நூலகத்தில் சம்பளமில்லாமல் பணியாற்றினார்கள். அந்த நாட்களில் சுமார் 100 புத்தகங்கள் அடங்கிய ஒரு brief case அவரிடம் ஒப்படைத்தேன். பெரியார், அண்ணா மற்றும் பலதரப்பட்ட இஸ்லாமிய நூல்கள் எல்லாம் அதில் இருந்தது.
''அப்போ, brief case ? என்று ஒரு கேள்வி எழுப்பினார்கள். அதுவும் நூலகத்துக்குத்தான் என்றேன். இன்றும் அவர்கள் அதை என் பெயரால் வரவு எழுதி வைத்த குறிப்பு அங்கு இருக்குமென நினைக்கிறேன்.
மாமா அவர்கள் மறைந்து விட்டார்கள் என்ற செய்தியை பார்ப்பதற்கே சங்கடமாக இருக்கிறது. அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்துள்ளவைகளை நாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
மர்ஹூம் அவர்களின் நல்ல செயல்களை அல்லாஹ் கபூல் செய்வானாக. அவர்களின் குறைகளை மன்னித்தருள்வானாக அவர்களின் மண்ணறையில் சுவர்க்க பூங்காவாக்கி வைப்பானாக . அவர்களுக்கு மேலான சுவர்க்க வளைவை நசீபாக்கி வைப்பானாக ஆமீன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross