செய்தி: காயல்பட்டணம்.காம் எழுத்து மேடை மூத்த ஆசிரியர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா காலமானார்! செப். 23 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில் லாஹி வா இன்ன இலைஹி ராஜாஹூன்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[22 September 2016] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44670
எனதன்புக்குறிய ALS மாமா என்று அன்போடு அழைக்கக்கூடிய லெப்பைசாகிபு காக்காவின் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்! இன்னாலில் லாஹி வா இன்ன இலைஹி ராஜாஹூன்!
லெப்பை சாகிபு காக்காவை பொறுத்தவரை எவரிடமும் இனிமையாக பழக்கூடிய பச்சிளம் குழந்தையின் மனத்தைப்பெற்றவர்!.
எதிரில் இருப்பவர் எவராக இருந்தாலும் அவர் தமக்கு அறிமுகமாக இல்லாவிட்டாலும் ,பார்த்தவுடனேயே புண்சிரிப்பை சிந்தும் சிறப்புக்குறிய மாமனிதரை இழந்து விட்டோம்!
ஜமாத்து ,தெருவழி நமக்கு என்ன செய்தது என்று எண்ணாமல்,நாம் ஜமாத்திற்காக என்ன செய்தோம் என்ற ஒரு தொண்டுள்ளத்தின் அடிப்படையில்,தாயும்பள்ளி ஜமாத்தின் மேம்பாட்டிற்காக அள்ளும் பகலும் உழைத்த உத்தம மனிதர் இன்று நம்முடன் இல்லை!
சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பரிச்சியமானவர் மட்டுமல்ல ,அவர்கள் குடும்பத்தோடு உள்ளத்தூய்மையாக உறவாடி உரிமையோடு சென்று வந்தவன் நான்!
அப்படிப்பட்ட நெருக்கமுடிய ஒரு சகோதரரை நானும் என் குடும்பத்தாரும்,என் ஜமாத்திலுள்ள அனைத்து குடும்பங்களும் இழந்து நிற்கிறோம் என்று சொன்னால் அது நிதர்சனமே!
லெப்பை சாகிபு காக்கா அவர்கள் நமதூரிலுள்ள அனைத்து மழலை செல்வங்களோடு ஒன்றிணைந்து ,தங்களுடைய வயதைக்கூட எண்ணிப்பாராமல் தாமும் ஒரு தவழாத பிள்ளையாக மாறி பாசத்தை கொட்டி அப்பிஞ்சுள்ளங்களின் தேவையறிந்து அவர்களை அகமகிழ செய்வதோடு அவர்களின் அன்புள்ளத்தை வென்றெடுக்கும் வித்தக மனம் படைத்த உத்தமர்!
நேரு மாமா பிறந்த நாளை குழைந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்!.
என்னைப்பொறுத்தவரை, நம் காயல்பதியில் "ALS மாமா" அவர்களின் பிறந்த நாளை
"பிஞ்சுள்ளங்களின் பிரியமான நாள்" என்று பெயரிட்டு கொண்டாடினாலும் பொருத்தமாக இருக்கும் என ஆசைப்படுகிறேன்!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பிழைகளையும் பொறுத்து ,ஆக்கிரத்தில் "ஜன்னத்துல் பிர்தௌஸ்"என்ற நற்பதவியை வழங்கியருள்வானாக ஆமீன்!
அன்னாரின் பிரிவுத்துயரில் வாடி,வதங்கும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் குறிப்பாக என் ஆருயிர் நண்பன் பாரூக்குக்கும்,
அன்பு சகோதரர் டாகடர் கிஜார் அவர்களுக்கும் என் குடும்பத்தார்கள் அனைவர்களின் சார்பாக இரங்கலையும்,ஆழ்ந்த அனுதாபம் கலந்து ஆறுதலையும் ஸலாத்தினையும் தெரிவித்து கொள்கிறோம்.
அஸ்ஸலாமு அழைக்கவும்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross