செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2016: காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, திமுக கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...EGO ! PLEASE U GO .... posted bymackie noohuthambi (kayalpatnam )[01 October 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44737
EGO ,PLEASE YOU GO …
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் இந்த கால கட்டத்தில் களத்தில் எதிரும் புதிருமாக நிற்கும் வேட்பாளர்கள் TRUMP – HILARY CLINTON இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்கிறார்கள் தாங்கள் கொண்ட கொள்கையே சரி என்று வாதிடுகிறார்கள்.
இதை உலகில் உள்ள மக்கள் எல்லோரும் தொலைக் காட்சியில் கண்டு கொண்டிருக்கிறார்கள். நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு தினங்களுக்கு முன் நான் அதை பார்த்தேன். அதிசயம் என்னவென்றால் இருவரும் மேடைக்கு வருகிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் கைகொடுத்துக் கொள்கிறார்கள்.
இன்னொரு நிகழ்ச்சி .இன்றைய அமெரிக்கா அதிபர் எங்கோ செல்கிறார். அவரை இடை மறித்து அவருடைய ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்க்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று அவரது அடையாள அட்டையையும் கேட்கிறார்கள். முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் சிரித்துக் கொண்டே தனது கோட் பையில் கையை விட்டு அதை எடுத்துக் காட்டுகிறார்.
இந்த இரண்டு விஷயங்களும் நமது நாட்டில் எந்த மூலையிலும் எந்த அரசியல் களத்திலும் காண முடியாது.
ஏன் நமது ஊரையே எடுத்துக் கொள்ளுங்கள். உள்ளாட்சியில் நல்லாட்சி வேண்டும் ஊழலற்ற தன்னலமற்ற லஞ்ச லாவண்யமற்ற ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்று எல்லோரும் ஆசைப் படுகிறோம் ஒற்றுமையாக ஓரணியில் இருந்து அதை சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறோம் அதற்காக து ஆ செய்கிறோம். ஆனால் செயலளவில் அது 2011ம் வருடத்தை போல் தான் இருக்கிறது என்பதை காய்தல் உவப்பு இன்றி தூரத்தில் நின்று அவதானிப்பவர்கள் வருத்தத்துடன் கண்டு வருகிறார்கள்.
ஐக்கிய பேரவை மீண்டும் புது உத்வேகத்துடன் இயங்க பிரிந்து சென்றவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறோம். கசப்பான நாட்களை மறந்து நடந்தவைகளை மறந்து மன்னித்து விட்டுக் கொடுத்து மீண்டும் ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்த உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவிருக்கிறோம் என்று சொன்னார்கள். நாளை பொழுது விடியும் பொழுது காயலுக்கு காயலருக்கு ஒரு விடியலை தேடி தரும் பொழுதாக அமையும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்கின்ற இந்த வேளையில் வாட்சாப் குழு என்று அமைந்து அது இரண்டாக பிளந்து மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக சென்று கொண்டிருக்கிறது.
எனது வாட்சப்பை திறந்து பார்த்தபோது அதில் நடப்பதென்ன வாட்சப் குழுமம் என்று ஒன்றும் நகர்நல மன்றம் 2016 வாட்சப் குழுமம் என்று ஒன்றும் எதிரெதிராக கருத்துக் களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன அப்படியானால் 2011 இல் உள்ளாட்சி தேர்தலின்போது பிரிந்து நின்று களம் கண்ட இரு அணிகளும் மீண்டும் சந்தித்துப் பேசவில்லை, இரு அணிகளின் உணர்வுகளுக்கும் வடிகால்கள் அமைத்துக் கொடுக்கப் படவில்லை அவர்கள் மீண்டும் இந்த உள்ளாட்சி தேர்தலில் பிரிந்தே நிற்பார்கள் பிரிந்தே வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.
இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறையாக தெரியவில்லை. பெரியவர்கள் இளைஞர்களை அழைத்து பேச வேண்டும் இளைஞர்கள் அவர்கள் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து தங்கள் தரப்பு நியாயங்களை அவர்களிடம் எடுத்து சொல்லி இரு சாராரும் இணைந்து செயல்பட்டால்தான் 2016 உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய வாய்ப்புள்ளது.
இளையதலைமுறை முதிய தலைமுறையை அரவணைத்து செல்ல வேண்டும் முதிய தலைமுறை இளையதலைமுறையை வருடிக் கொடுக்க வேண்டும். ஆத்திரம் வரும் போது ஐந்து விரல்கள் வீரியம் அடைகின்றன. அமைதி திரும்பும்போது அதே ஐந்து விரல்கள் சுகம் தருகின்றன .
இதை நாம் இப்போதே செய்ய தவறினால் மீண்டும் இருள்மயமான 2011ம் ஆண்டு ஆட்சியை தான் நாம் சந்திக்க வேண்டும். சிந்திப்போம் செயல்படுவோம்..
EGO, PLEASE YOU GO…
I MAY GO, YOU MAY GO, BUT EGO MUST GO.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross