Re:...ஊருக்குள்ளே ஒரு காடு உள்ளத்தில் போடும் ஒரு கோடு posted bymackie noohuthambi (kayalpatnam )[05 October 2016] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 44769
நான் கோடுபோட்டால் இவர்கள் ரோடு போடுவார்கள்
நான் புள்ளி வைத்தால் இவர்கள் கோலம் போடுவார்கள் என்று இளைஞர்களை பார்த்து நான் சொல்வது வழக்கம்.
மரம் வளர்ப்பது பற்றி மிக தெளிவாக இதைவிட ஒரு கட்டுரை நாம் படிக்க முடியாது.
நண்பர் ஹபீப் இப்ராஹிம் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. திருமறை வெளிச்சத்தில் திருநபியின் திருவாய் மலர்ந்தருளிய பொன்மொழிகளில் மரம் வளர்ப்பதன் நன்மைகளை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள்.
நமக்காக இல்லாவிட்டாலும் அல்லாஹ்வின் அவனது திருத்தூதரின் கட்டளைகளை பின் பற்றுகின்றேன், அவர்கள் சுன்னத்தை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத் வைத்து மரம் நட்டினால் கூட அதற்கென தனி நன்மைகள் இருக்கவே செய்யும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ''மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்'' என்ற அரசின் அறிவிப்பு பலகை கூட அந்த மரத்தில் ஆணி அடித்துதான் விளம்பர படுத்தப் படுகிறது நமது நாட்டில்.
தெரு ஓரங்களில் நமது வீடுகளுக்கு முன்னால் இதை ஒரு தன்னார்வ தொண்டாக சில காலங்களுக்கு முன் SDPI என்ற இயக்கத்தினர் செய்து வந்தார்கள். ஆடுகளுக்கு அதில் ஆட்சேபனை மாடுகளுக்கு அதில் ஒவ்வாமை ஆனால் மனிதர்களுக்கும் கூட அதில் உடன்பாடில்லாமை அடுத்த நாளே அவை பிடுங்கி எறியப்பட்ட பரிதாப நிலை இருக்கிறது நமது நாட்டில்
நமது ஊரில்.நமது வீடுகளை ஒட்டி எப்படியும் ஒரு கொல்லை இருந்தது முன்காலங்களில். இயற்கை உபாதைகளை கழிக்கமட்டுமல்ல மரங்கள் வளர்க்கவும் அவை பயன்பட்டன. ஆனால் விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக நமது நாட்டில் மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன இப்போதுதான் அரசு விழித்துக் கொண்டு அப்படி செய்யக்கூடாது, அதற்கு பத்திர பதிவு கிடையாது என்று அறிவித்துள்ளார்கள். என்றாலும் நீங்கள் போட்டுள்ள கோடு நமது உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும் இன்ஷா அல்லாஹ்.
இணையதளங்களை பார்ப்பவர்களுக்கு மட்டுமே பயன்படும் இந்த ஆக்கத்தை ஒரு சிறிய கை ஏடாக மக்களுக்கு விநியோகிக்கலாம், நீங்கள் உத்தரவு தந்தால் அல்லது நீங்களே அதற்கு முயற்சி செய்தால் என்போன்றவர்கள் அதற்கு நிதியுதவியில் ஒரு சிறிய பங்களிப்பை செய்ய தயாராக இருக்கிறேன். அணில் மண் சுமந்தது போல..அந்த கதை உங்களுக்கும் தெரியும்....
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கடலில் பாலம் அமைக்கும்போது அந்த சீரிய பணிக்காக ''அணிலும் மண் சுமந்தது ராம பிரான் மனம் மகிழ்ந்தார்'' என்று ராமாயணம் சொல்கிறது.
மரம் வளர்ப்போம்
நிழல் கொடுப்போம்
கனிகள் பெறுவோம்
அல்லாஹ்வின் அருள் பெறுவோம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross