DCW என்ற நச்சு ஆலை நமதூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மரங்களால் நமக்கு கிடைக்கும் உயிர் மூச்சான சுத்தமான சுவாசக்காற்றை மனித இன அழிவிற்கான நச்சுக்காற்றாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் அதன் நச்சுத்தன்மையை வீரியம் இழக்கச் செய்ய நமதூருக்குள்ளேயும் ஒரு காடு மிகஅவசியத்தேவை.
நமதூரில் கம்மா காலத்தில்
பெருவாரியான வீடுகளை ஒட்டி சிறு தோட்டம் இருந்தது. அதெல்லாம் இப்ப நம்ம உம்மாக்கள் கம்மா ஆவதற்க்காக
அதாங்க தம் பெண் பிள்ளைகளின் கல்யாணத்திற்க்காக அச்சிறு தோட்டங்களையும் அழித்து வீடு கட்டிக்கொடுக்கும் நிர்பந்தச் சூழல் ஒருபக்கம்.
பள்ளிவாசல்,
பள்ளிக்கூடங்கள், இன்ன பிற இடங்களை விஸ்தீகரணம் என்றும் காலத்திற்கேற்ப்ப நவீன கோலமாக்குகின்றோம் என்றும் மரங்களை வெட்டும் அவல நிலைமை மருபக்கம்.மெத்த படித்தவர்களும் இந்த இழிச்செயலில் ஈடுபடுவதென்பது தான் மிகவும் கவலையான நிகழ்வு.
மனித உயிருக்கு அச்சுருத்தல் இல்லா நிலையில் ஒரு மரத்தை வெட்டு தென்பது மாபாதகமான பல கொலைகளுக்கு ஒப்பானது. அன்றாட மனித வாழ்க்கை அமைதிகலந்த மகிழ்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போது திடிரென சுனாமி, யூகம்பம், இன்னபிர பூகோலசீற்றங்களால் மனிதன் சிக்கும்போது தன் வசிப்பிட இழப்பு குழந்தைகள் இழப்பு என்று தாங்க முடியாதுயரங்களுக்கு ஆளாகின்றோம் என்பதை அனுபவ பூர்வமாக அறிந்த மானுட இனமே....!
ஒரு பெரிய மரத்தில் இருந்து காலைவையில் உணவு தேடி பறந்துச் செல்கின்ற தாய்பறவைகள் தன் சேய்பறவைகளுக்காக தன் அலகில் உணவை பற்றிக் கொண்டு வந்தபோதும்!., தன் துணைப் பறவை முட்டையிட்டு அடைகாத்து தன் வம்சத்தை வெளிக் கொண்டு வருவதற்கக்காக தன்வசந்த மாளிகையான கூட்டின் கட்டுமான பணிகளின் இறுதி நிலைக்காக குச்சிக்களை தன்அலகால் அழகாக கொத்திக் கொண்டு வந்த போதும்!., தன்னுடைய எல்லாமே ஆன மரம் பல துண்டுகளாக சிதறியும் அதன் கீழே பறவைக்ககுஞ்சுக்கள் பல நசுங்கி இறந்தும் சில நைந்து மரண ஒலத்தில் கீச் கீச்சென்று கத்தும் பரிதாப நிலையை என்றாவது சிந்தித்ததுண்டா?
மரங்களில் வாழும் பறவைகள் எச்சம் போட்டு நம்மை தொந்தரவுச் செய்கின்றது என்று நாம் அதன் ஆணிவேரை புடுங்வோமானால்
நாம் நம் சந்ததிகளின் அழிவுக்காண ஆபத்தான நஞ்சை நம் கையால் நடுகின்றோம் என்று நாம் எப்போது புறிவோம். நமது ஊருக்குள்ளேயும் ஒரு காடு அமைவதற்கு முன்னால் குறைந்த பட்சம் எவ்விதத்திலும் மனித உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கும் மரங்களை வாழவிட்டு நாமும் நலமாக வாழ்வோம்.
தேனீகள் பல மலர்களிலிருந்து மகரந்தத்தை உட்கொண்டு அதன் மூலம் தன் வயிற்றிலிருந்து வெளியேற்றி தேனடையில் சேகரித்து வைத்த தேன் போல் மரம் சம்பந்தமான பல தகவல்கள் சேகரித்து நம் நலமான வாழ்விற்காக ஆக்கமாய் தந்த சகோதரர் அ.ர.ஹபீப்இப்றாஹீம்
அவர்களுக்கும் மற்றும் இதனை வெளியிட்டுள்ள இவ்விணையதளத்தின் காயல்பட்டணம்.காம் அங்கத்தினருக்கும் ஜஸாகல்லாஹு க்ஹைரா.
கர்னாடக மாநிலம் கார்வாரிலிருந்து
சாளை:M.A.K. முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross