நம் ஆதிபிதாவையும்,மாதாவையும் அல்லாஹ் நாம் இழைத்துவிட்ட பாவத்திற்காக சுவனத்திலிருந்து பூமிக்கு அனுப்பிவிட்டான் சுவர்க்கத்தில் கட்டுப்பாடில்லாமலிருந்தபோது இல்லாதவெட்கம் பூமிக்குவந்ததும் வெளிப்பட்டது அப்போது நம்மானத்தை மறைக்க உதவியது தாவரங்களின் இலை,தழைகளே ஆரம்பத்திலிருந்தே வந்தஉதவிதான் தாவரங்கள் அது இறைவன்தந்த சாகாவரங்கள் இன்றுநவீனமென்றபோர்வையில் தாவரங்கள் மனிதனுக்கு பாரமாகிவிட்டன.
அல்லாஹ் தனது நிறைவு வேதத்தை மலைகளின்மீது பொறுப்பளிக்க அவைகளைக்கேட்டான் அவைதமக்குமுடியாதென மறுத்துவிட்டன ஆனால் மனிதன் அந்தப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான்,அதை ஓதுகிறான்,புரிந்துகொள்கிறான் ஆனால் அந்தவேதவாக்கியப்படி நடக்கமறந்துவிடுகிறான் அஸ்தஃஃபிருல்லாஹுல் அழீம்.
மலைகள் எதன்பிடியில் நிலைத்து நிற்கின்றன? அதன்மீது நீண்டு,நெடுகி படர்ந்திருக்கும் விருட்சதாவரங்களின் வேர்ப்பிடிப்பில்தான் மலைகளாக உயர்ந்து நிற்கின்றன இதில்நமக்கு வேர்களாக பல்வேறுபடிப்புகளுள்ளன
புரிந்துகொள்வோம்.
தாவரங்கள்
புவியின் தாகம்தீர்க்கும் வரங்கள்
மரங்கள்
மண்ணின் மகத்தானகரங்கள்
இம்மண்ணிற்கு
உரமாக மரங்களே
பசுமை
மற்றகோள்களுக்கில்லா
புவியடைந்த பாக்கியம்
பசுமை
புவியின் புண்ணியச்சின்னம்
நம்கண்களை நாமேகுத்திக்கொள்ளலாமா?
பசுமை ஒருசுமையல்ல
நம் புவியின் இமை
இறைவா
தா
வரம் தா
தாவரம்தா
என இறைஞ்சுவோம்
நட்டவில்லையென்றாலும் நஷ்டமில்லை வெட்டாமலிருங்கள்.
மாஷா அல்லாஹ் ஆசிரியர் இறைமறை, நபியுரைகளோடு கட்டுரையை வரையறுத்திருக்கிறார் வாழ்த்துக்கள் விழுதுகளாக பழுதில்லாத படைப்புகள்தருகிறீர்கள் ஜஃஜாக்கல்லாஹ் கைர் இன்ஷா அல்லாஹ் இன்னும் நல்ல,நல்ல எதிர்பார்ப்புகளுடன் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross