Re:...நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை.... posted bymackie noohuthambi (kayalpatnam )[13 October 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44796
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் சிறப்பான குரல்வளமும் நிறைந்திருந்த மர்ஹூம் அவர்களின் கிராஅத் பாங்கு, இமாமத், இஸ்லாமிய பாடல்கள் எல்லாமே மனக்கண் முன் வந்து செல்கிறது.
மக்கி என்று அவர்கள் 'க்' என்ற எழுத்தில் கொடுக்கும் அழுத்தம் என்னை திரும்பி பார்க்க வைக்கும். அல்பத்தாஹ் என்ற பெயருடன் அவர்களது மகனார் தொடங்கிய ஹஜ் உம்ராஹ் பயண நிறுவனம் பல நூறு ஹாஜிகளை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஒருவர் விட்டுச்செல்லும் அரிய பொக்கிஷங்களில் மிகவும் சிறந்தது அவர்களுக்காக து ஆ செய்யும் மக்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் சொல்லியபடி மர்ஹூம் அவர்களது மகனார் அபுல்ஹசன் அவர்கள் விளங்குவது மன நிறைவை தருகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை பொருந்திக் கொள்வானாக அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக அவர்கள் குறைகளை மன்னிப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக ஆமீன்.
எத்தனை காலம் வாழ்ந்தாலும் தனது தந்தையின் மறைவை ஜீரணித்துக் கொள்ளும் உள்ளம் எல்லோருக்கும் இருப்பதில்லை. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross