ஆனால் இந்தியா ஒருஜனநாயகநாடு என்பதைமறந்து இன்றைய இந்தமத்தியஅரசு பொதுசிவில் சட்டம் என்ற ஆயுதத்தைக்கயியலெடுத்து மற்றவர்களின் நம்பிக்கையில்தலையிட்டு அதில்குளிர்காயநினைக்கிறது அல்லது விளம்பரம்தேடுகிறது இந்தியா ஒரு சுதந்திரகுடியரசுநாடுதானா? என்றுசந்தேகம்வருகிறது எங்களின் இந்த ஷரீஅத் விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தால் அதற்கான விளக்கங்கள்தர மார்க்கஅறிஞர்களிருக்கிறார்கள்
(ஆன்,பெண் இருபாலருக்கும்) அவர்களுக்குத்தெரியப்படுத்தி ஒருஆலோசனைக்குழுஅமைத்து அவர்களின்கருத்துக்களைக்கேட்டு
அதன்படிசெயல்படுங்கள்
அதைவிட்டுவிட்டு இஸ்லாமெனும் மகாசமுத்திரத்தில் அஸ்தஃஃபிருல்லாஹுல் அழீம்.
நீங்கள் படித்தவர்கள் குர்ஆனைப்படியுங்கள்,நபியின் போதனைகளையும் அவர்கள்வாழ்ந்த வாழ்க்கைவரலாற்றையும் படித்துப்பாருங்கள் இன்ஷா அல்லாஹ் தெளிவுகிடைக்கும் பிறகுசொல்லுங்கள் ஷரீஅத் சரியா/பிழையா அப்பொழுதுதான் இறையான்மை,நெறியோடுசேர்ந்த ஆட்சிசெய்யமுடியும் இல்லையென்றால் விரைவிலேயே அஸ்திவாரம்வலுவிழந்து வீழ்ந்துவிடும்
இந்தவிஷயத்தில் குறிப்பாக பெண்கள் மிகமிக விழிப்புணர்வோடுசெயல்படவேண்டும் காரணம் வெகுவாகப்பெண்கள்தான் பகடைக்காய்களாகப்பயன்படுத்தப்படுகிறார்கள் ஷரீஅத் பெண்களுக்கு நிச்சயமாக ஹிஜாபாக பாதுகாப்பாக செயல்படுகிறது எனவே நமது உரிமைகளில்,உணர்வுகளில் கைவைக்கநினைப்பவர்களுக்கு நமது எதிர்ப்பைக்காண்பிக்கவேண்டும் நமது உரிமைகளுக்கு பங்கம் வராமல் வாதாடிதக்கவைத்துக்கொள்வதும் ஈமானின் முக்கிய அங்கமாகும் நமக்குள் கருத்துவேறுபாடுகளிருக்கலாம்,
ஆனால் நமது புனித கலிமாவாகிறது "லாயிலாஹ இல்லல்லாஹு முகம்மதுர்ரஸூலுல்லாஹ்" என்பதிலும் ஈமான்கொள்வதிலும் கடமைகளிலும் எந்தமாற்றமுமில்லை
எனவே தாய்மார்களும் சகோதர,சகோதரிகளும் நிலைமையிப்புரிந்துகொண்டு ஒற்றுமையாக எல்லோரும் இணைந்து நமதுக்கருத்துக்களைப்பதிவிட்டு எதிர்ப்பைக்காட்டி ஷரீஅத்தைப்பேணுவோம் இன்ஷா அல்லாஹ் அல்லாஹு தஆலா என்றும் நம்முடனிருக்கிறான் ஆமீன் அல்லாஹு அக்பர்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross