செய்தி: காயல்பட்டினம் நகராட்சியுடன் இணைந்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தூய்மை ஈமானின் ஒருபகுதி. posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[30 October 2016] IP: 37.*.*.* | Comment Reference Number: 44849
இதுபோன்றதவறுகளைத்தவிர்க்க நவீனக்கழிப்பிட வசதிசெய்துகொடுத்து இருபாலருக்கும் பிரச்சினையில்லாது ஒழுக்கநெறியோடுசெயல்பட ஆவணசெய்யவேண்டும் குறிப்பாகபெண்களுக்கு பலபிரச்சினைகளிருக்கும் குழந்தைகளுடனும்,மாலையில்வருகிறார்கள் இருட்டியபிறகும்கூட இருந்துவிட்டுச்செல்கிறார்கள் அப்பாடியானால் அந்த இருபாலர் இயற்கைத்தேவைகளை எப்படிநிவர்த்திசெய்வது?எனவே நவீன கட்டணக்கழிப்பறையாவது நகராட்சிசெய்துதரவேண்டும்.
கண்காணிப்புகளைவலுப்படுத்த முன்புபஞ்சயாத்தாக இருந்தபோது ஒருசிறிய அறைபோலிருந்து அங்கிருந்துமாலை வானொலி ஒலிபரப்புகளையும்,செய்திகளைகேட்கமுடிந்தது பலவருடங்களாக அந்த நிகழ்வுகளும்,மக்கள்,முதியவர்கள் அமர்வதற்கு ஒருவட்டவளாகமுமிருந்தது அவை அகற்றப்பட்டுவிட்டன.அவைமீண்டும் செயலுக்கொண்டுவந்து காவலர்களையும் நியமித்து சீர்செய்யவேண்டும்.
குறிப்பாக உணவுப்பண்டங்களை அங்கேயேவைத்து சமையல்,ஆயத்தம்செய்துகொடுப்பதினால்தான் பெரும்பாலும் நம்கடற்கரையின் வெள்ளைமணல் இருகருமையடைந்துவிட்டன
இதைத்தவிர்க்க குறைந்தபட்சம் பாதுகாப்பாக மண்ணென்னையடுப்பை தள்ளுவண்டிகளில் வைத்துப்பயன்படுத்தவும்,குப்பைக்கழிவுகளைதப்பாமல் அதற்காக வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டியில்தான் போடவேண்டுமென உத்தரவிடவேண்டும்.
நாம் மற்றவர்களின்பிழைப்பிற்கு தடைபோடவில்லை ஆனால் மாசுபடாமல்,சுகாதாரக்கேட்டிலிருந்தும்பாதுகாப்புவேண்டும் அதற்கு அந்தவியாபாரிகளுக்கு நகராட்சிமூலம் வாக்குறுதிபெற்று,அனுமதிபெற்ற அடையாளஅட்டைவழங்கப்படவேண்டும்.
மக்கிகாக்கா அவர்களின் கருத்துப்படி
(நமதூர் கடற்கரையை சுத்தமாக வைக்க காயல்பட்டினம் கடற்கரை உபயோகிப்போர் சங்கம் என்று ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. அபூ தாபி காயல்நலமன்றம் இதற்கென நிதி ஒதுக்கி அதற்கான ஆட்களையும் நியமித்து கொஞ்ச நாள் அந்த பணி நடந்தது. ஒரு நகர்மன்றம் தன் கையில் எடுத்து செய்ய வேண்டிய வேலையை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் தார்மீக பொறுப்பாக கையில் எடுத்து செய்வதை வரவேற்க வேண்டும். ஆனால் அதை கொச்சைப் படுத்தி அதையும் நிறுத்தி விட்டார்கள். இப்போது நடப்பதென்ன குழுவினர் அதை மேற்கொண்டிருக்கிறார்கள். பாராட்டுக்கள்.)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross