ஷாஜஹான் தாஜ்மஹாலைக்கட்டினான்
கல்லெல்லாம் கலைச்செய்தான் பல்லவராஜா என்பார்கள்
ஆனால் அங்கே படைப்பாளியின் திறமையும்,உழைப்பும் வெளிப்படவில்லை அரசனின் பெருமையே வெளிப்பட்டிருக்கிறது
அதேசமயம்,பிக்காஸோ,ரவிவர்மா போன்றோர் போல்சிலர் தனித்தன்மையுடன் அடையாளம் காணப்படுகின்றனர்.
முதன்முதலில் புனிதமறையாம் குர்ஆனை அரபுத்தமிழில் விளக்கங்களோடு மொழிபெயர்த்து பொருள்புரிய வழிகாட்டியது அல்ஹம்துலில்லாஹ் எனது கேளறிவு சரியாக இருக்குமானால் மஹான் ஹாஃபிழ் அமீர் வலியுல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்தாம் அந்தக்காலத்திலிருந்து முந்திய தலைமுறைவரை வசந்தத்தை அனுபவித்தது அரபுத்தமிழ் கல்விவழிகாட்டியாக இறைமறை மனதில் ஒளியேற்றியது அரபுத்தமிழ்வழிமுறைதான் இறைமறைமட்டுமல்ல எத்தனையோ ஹதீதுகளும் வரலாறுகளும் நல்லநல்ல விஷயங்களும் இன்று அது இனங்காணப்படாத ஒன்றாக மறைந்துவருவது மிகமிக வேதனைக்குரியவிஷயம்.
தீன்கல்விக்கூடங்களில் அரபுத்தமிழ் கல்வியை மீண்டும் அறிமுகப்படுத்தவேண்டும் காகிதங்களில் செய்யப்பட கைவினைப்பொருட்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் நல்முத்துக்களுக்கு ஏன்தரப்படுவதில்லை உண்மையான இயற்கைமுத்துக்கள் ஈரம்பட பயன்பாட்டிலிருக்கவேண்டும் இல்லையெனில் அவைப்பொடிகளாக,தூள்களாக நொறுங்கிப்போகும்
கல்வியும் அப்படித்தான் நாம் நெருங்கினால் அணைக்கும் இல்லையென்றால் எடுபட்டுப்போகும்
முஹ்தார் அஹ்மத் அவர்களையும்,அரபி ஹாஜியார் அவர்களையும் எவ்வளவு விரைவாக சந்திப்பைஏற்படுத்தி நம்மக்களைசந்திக்கச்செய்கிறோமோ அவ்வளவு நிறைவாக இருகடல்கள் சந்தித்த கலையுடன்கூடிய சிந்தனையாற்றலடைவோம் இன்ஷா அல்லாஹ் வல்ல இறைவன் இக்கலைஞர்களின் வாழ்வை ஒளிமயமாக்கி நீடிய ஆயுளுடன் நிம்மதியான வாழ்க்கையை வழங்கியருள்வானாக ஆமீன்
மக்கிக்காக்கா சொக்கித்தான் போனேன் மாஷா அல்லாஹ் உங்களுடைய தொடரும் பின்னூட்டம் பார்த்து
""ஒரு வேளை கபரில் இருப்பவர் இதை காண நேரிட்டால் அவரே ஒரு கணம் அசந்து விடுவார். நான் மீண்டும் மீண்டும் சாகவேண்டும் இவர் மீண்டும் மீண்டும் என் மண்ணறை மீஜானில் எழுத வேண்டுமே என்று ஏங்கி நிற்பார்கள்... ""
ஜஃஜாக்கல்லாஹ் ஆசிரியர் அப்துல் ரஹீம் அவர்களே நல்ல,நல்ல வித்தியாசமான,பிரயோஜனமாக செய்திகளுடன்வந்து திரும்பிப்பார்க்கச்செய்கிறீர்கள் மாஷா அல்லாஹ் தொய்வில்லாது தொடரட்டும் அதற்கான அனைத்துஆற்றல்களையும் அல்லாஹ் வழங்கப்போதுமானவன் ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross