செய்தி: ரூ.500, 1000 பணத்தாள்களை மாற்ற வங்கிகளிலும், ஏ.டீ.எம். களிலும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பு! கொதிப்பில் ‘குடி’மகன்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...''பிச்சைக்காரன்'' சொன்னதை செயல்படுத்திய மோடி posted bymackie noohuthambi (kayalpatnam )[12 November 2016] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 44877
‘‘இந்தியாவில் ஏழைகளே இல்லாமல் போவதற்கு ஒரே வழி ஆயிரம் ரூபாய் நோட்டையும், ஐநூறு ரூபாய் நோட்டையும் ஒழிப்பதுதான்..!’’ - ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் கடந்த சில நாட்களாக முகநூல், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்களில் பெரிய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது. பிரதமர் மோடி அவர்கள் இயக்குனர் சசி அவர்களின் திரைப் படத்தை பார்த்தாரோ என்னவோ....இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்து விட்டு ஜப்பானில் போய் ஒளிந்து கொண்டார்.
8 ஆம் திகதி மாலை 6 மணிக்கெல்லாம் இந்த செய்தி தலைநகர் டில்லியில் கசிந்து விட்டதாக நமதூர் நண்பர் ஒருவரே என்னிடத்தில் சொன்னார் . டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் சிலர் எழுப்பியுள்ள சந்தேகங்கள், நீதிமன்றத்தில் பொது நல வழக்கின் தீர்ப்புக்கள், 9 கோடி ரூபாய் வரை புதிய 2000 நோட்டுக்கள் தேர்தல் கமிஷனால் கைப் பற்றப் பட்டுள்ள செய்திகள் எல்லாமே மோடி அவர்களின் நம்பகத் தன்மையை சந்தேகிக்க வைக்கிறது. அவரே ILLEGAL TENDER என்ற நிலைக்கு ஆளாகி விட்டாரா என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். SURGICAL OPERATION என்பதே ஒரு நாடகம் என்கிறார்கள்.
வீதியிலே காணும் காட்சிகளை பார்க்கும்போது அவர் கடத்தல்காரர்களை ஹவாலா காரர்களை தண்டிக்கிறேன் என்று சொல்லி சாதாரண அன்றாட காய்ச்சிகளை பதற வைத்திருக்கிறார், ஏழைகளின் வாழ்வின் விளக்கேற்றி வைக்கிறேன் என்று சொல்லி அவர்கள் மீதே எண்ணையை ஊற்றி பற்ற வைத்திருக்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது.
ATM தொடர்ந்து இயங்காத நிலை, வங்கிகளில் குறிப்பிட்ட தொகைகள் கிடைக்காத நிலை எல்லாம் பார்க்கும் போது ஒரு தெளிவான திட்டம் இல்லாமல் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் ஜப்பான் போகுமுன் இதை செய்துவிடவேண்டும் என்ற அவசர கதியில் இந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தெரிகிறது.
அடுத்தநாள் அமெரிக்கா தேர்தல். அங்கும் ஒரு அதிரடி நடந்திருக்கிறது. எல்லோரும் ஹிலாரி கிளின்டன் ஜனாதிபதியாக வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் DONALD TRUMP ஜனாதிபதி ஆகி இருக்கிறார். கோமாளிகள் ராஜ்யத்தில் அறிவாளிகளுக்கு வேலை இல்லை என்று சொல்வார்கள்.
இங்கே ஒரு மதவாதி தலைவராக இருக்கிறார்
அங்கே ஒரு இனவாதி தலைவராகி இருக்கிறார்.....
ஆண்டவா இன்னும் 3 வருடங்கள்..குரங்கு கையில் அகப்பட்ட பூமாலைபோல் இந்த நாட்டில் இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ. நீயே மிக அறிந்தவன். .
HASBUNALLAAHU NIUMAL VAKEEL NIUMAL MOULA VA NIUMAN NASEER .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross