Re:...சாயம் போகிறது.... posted bymackie noohuthambi (kayalpatnam )[24 November 2016] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 44937
இந்தியாவின் புதிய 2000 நோட்டு சாயம் போகிறது என்ற உண்மை உலகம் முழுவதும் வெளிச்சமாகி விட்டது. சவூதி அரேபியாவில் இந்தியா நோட்டுக்கள் எந்த அமைப்பிலிருந்தாலும் செல்லாது என்று கை விரித்து விட்ட நிலையில், இன்று நேப்பாளமும் இந்தியாவின் புதிய 500 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்துள்ளது. சார்க் நாடுகளில் நேபாளமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது...இப்படியே போனால் மற்ற நாடுகளும் இந்த நடை முறையை பின்பற்றி நம்மை செல்லா காசுகளுக்கு சொந்தக்காரர்களாக ஆக்கி விடுவார்கள்.
''குரங்கு கையில் பூமாலை - மோடி கையில் இந்தியா'' என்ற ஒரு நிகழ்ச்சி இன்று தமிழன் தொலைக்க காட்சியில் ஒளி பரப்பாகியது. சகோதரர் மௌலவி பீ ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் தர்க்க ரீதியாக அவர் எடுத்து வைக்கும் வாதங்களை ஒத்துக் கொள்ளவே செய்வார்கள். .
''அல்லாஹ் ஒருவனை உயர்த்த நினைத்தால் எப்படியும் உயர்த்துவான். கேவலப் படுத்த நினைத்தால் எப்படியும் கேவலப் படுத்துவான். அவன் நாடியவர்களுக்கு ஆட்சியை கொடுப்பான் அவன் நாடியவர்களிடமிருந்து ஆட்சியை பிடுங்கி கொள்வான் அவன் சர்வ வல்லமை உள்ளவன்'' என்ற திரு வசனம் நிரூபணமாகிக் கொண்டு வருகிறது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளுக்கு முஸ்லிம்கள் அமைதி காத்து அல்லாஹ்விடம் து ஆ கேட்டார்கள். விளைவு ஆட்சி அதிகாரத்தில் இன்னும் இரண்டு வருடங்கள் நீடித்து இருக்க எல்லா வாய்ப்பும் வசதியும் அரசியல் செல்வாக்கும் அரசியல் சட்டம் கொடுத்த உரிமையும் இருந்தும் கூட, ராஜபக்சே வின் ஜோசியர்களை வைத்து இறைவன் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்தான். சிறிய அபாபீல் பறவைகளை வைத்து பெரும் யானைப் படையை நிர்மூலமாக்கிய அல்லாஹ்வுக்கு இந்த கூலிப் படை ஆட்சியை அகற்ற எவ்வளவு நேரம் பிடிக்கும்.
அல்லாஹ்வின் ஷரீஅத் சட்டத்தில் மாற்றம் செய்யப் புறப்பட்ட மோடியின் ஆட்சியின் நாட்கள் எண்ணப் படுகின்றனவோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. பொருளாதார வல்லுநர்கள் வெளிப் படுத்தும் கருத்துக்கள் இதற்கு வலு சேர்க்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross