Re:...சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல்... posted bymackie noohuthambi (kayalpatnam )[03 December 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44960
''சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி''
ஒரு வழக்கை தீர்க்கும்போது துலாக்கோல் போல் நேர்மை கோணாமல் வழக்கை சீர்தூக்கிப் பார்த்து ஒரு பக்கத்திலும் சாய்ந்து விடாமல் தீர்ப்பு வழங்குவதுதான் மேலான குணமுள்ளவர்களின் சிறப்பு. இப்படி சொல்கிறது மேல்கண்ட குறள்.
இருவருக்கிடையே சமாதானம் செய்து வைப்பது மிக சிறந்த அமல் என்று அல்லாஹ் சொல்கிறான். VA ASLIHOO BAINA AKHAVAIKKUM , VASSULHU KHAIR என்று திருமறை வசனங்கள் இதை தெளிவாக சொல்கிறது.
ஒரு நபி தோழர் மஸ்ஜிது நபவிக்கு கவலையுடன் வருகிறார். இன்னொரு நபி தோழர் அந்த மஸ்ஜிதுன் நபவியில் இயூதிகாப் இருக்கிறார். கவலையுடன் வந்தவரிடம் அவர் விஷயத்தை கேட்க, நான் உங்களுடன் வந்து உங்கள் நண்பருடன் இது விஷயமாக பேசவா என்று கேட்கிறார். நீங்கள் அல்லாஹ்வின் பள்ளியில் இயூதிகாப் இருக்கிறீர்களே எப்படி வெளியே வரமுடியும் என்று வந்தவர் கேட்கிறார். நான் நபிகள் நாயகம் அவர்கள் திருவாய் மலர்ந்தருள கேட்டிருக்கிறேன். எவர் ஒருவர் தனது சக முஸ்லிமின் தேவைக்காக அவருக்கு உதவி செய்வதற்காக வெளியே அவருடன் செல்கிறாரோ அவருக்கு 10 வருடங்கள் இயூதிகாப் இருந்த நன்மை கிடைக்கும் என்று சொன்னார்கள். எனவே நான் வருகிறேன் என்று அவருடன் கூட சென்று அவருக்கு கவலை தந்த விஷயத்தை சம்பந்தப்பட்டவருடன் பேசி சுமுகமாக தீர்த்து வைக்கிறார்.இப்படி ஒரு நபி வழி நபி மொழி இருக்கிறது என்ற உண்மையை உலமாக்கள் நமக்கு சொல்லிக் காட்டுவார்கள்.
எனவே இந்த அடிப்படையில் புதிய ஐக்கிய பேரவை உறுப்பினர்கள் நிர்வாகிகள் தங்கள் செயல் திட்டங்களை அமுல்படுத்தும் போது, அல்லாஹ்வின் திரு பொருத்தமும் நபிகள் நாயகம் அவர்களின் நல்லாசியும் நிறையவே கிடைக்கும். சம்பந்தப் பட்டவர்களின் து ஆ வும் அத்துடன் சேர்ந்து கொள்ளும். புதிதாக அமைந்துள்ள ஐக்கிய பேரவையின் சட்ட திட்ட முன்வடிவுகள் உள்ளத்துக்கு மகிழ்ச்சி தருகிறது. கடந்த காலங்களில் இருந்த கசப்புகள் நீங்கி புதிய ஒரு வரலாற்றை படைக்க புறப்பட்டுள்ள ஐக்கிய பேரவை நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்.
உண்மையான இறை அச்சம் உள்ளவர்கள் யாரென்றால் அவர்கள் வாழ்விலும் தாழ்விலும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வார்கள் . கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள் சக மனிதர்கள் செய்த குற்றங்களை மன்னித்து விடுவார்கள் என்று ஒரு திருமறை வசனம் நினைவுக்கு வருகிறது.
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்துக்கு ஏன் வலிக்கிறது என்ற கேள்வி இனி இல்லை. காலிலே முள் குத்தினால் கண்ணில் நீர் சுரக்கிறதே, அதே போல் தான் ஒரு முஸ்லிமுக்கு காயம் ஏற்படும்போது அடுத்த முஸ்லிமுக்கு வலிக்க வேண்டும் அவன்தான் உண்மையான முஸ்லீம் என்ற நபி வழியை நபி மொழியை நாம் மனதில் கொள்வோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த சிறப்பான ரபீஉல் அவ்வல் மாதத்தில் இங்கே பதிவு செய்ய பட்டுள்ள ஐக்கிய பேரவையின் செயல்திட்டங்களை கபூல் செய்வானாக அதன்படி எல்லோரும் நடக்க அருள் புரிவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross