காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் பொதுக்குழுக் கூட்டத்தில், அவ்வமைப்பிற்கான சட்டதிட்டங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு, சிலவற்றைத் தவிர பெரும்பாலானவற்றுக்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ தலைமையில், இதர நிர்வாகிகள் முன்னிலையில் - ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸ் அரங்கில், 27.11.2016. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் கிராஅத் ஓதினார். அமைப்பின் இதுநாள் வரையிலான செயல்பாடுகள் குறித்து, செயலாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் விளக்கிப் பேசினார்.
அமைப்பை அரசுப் பதிவு செய்வதற்கான சட்டதிட்ட முன்வடிவை, துணைச் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் முன்மொழிய, அவை குறித்து நீண்ட கருத்துப் பரிமாற்றங்களும் - விவாதங்களும் செய்யப்பட்டன.
நிறைவில், சில சட்ட முன்வடிவுகள் தவிர்த்து, இதர அனைத்திற்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.
துணைச் செயலாளர் எஸ்.ஏ.ஜவாஹிர் நன்றி கூற, துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், அமைப்பின் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தகவல்:
P.M.A.ஸதக்கத்துல்லாஹ்
|