முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, சிறப்பு மருத்துவக் குழுவால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐசியூ) அவர் மாற்றப்பட்டார்.
இதயம் இயங்குவதற்கு உதவக் கூடிய கருவியின் துணையுடன் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ச்சியாக தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக அவ்வப்போது அப்போலோ மருத்துவமனையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.
மேலும், லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவை தொடர்புகொண்டு, அவரது ஆலோசனையின் அடிப்படையிலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
"முதல்வரின் உடல்நிலையை எங்களது மருத்துவர்கள் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர். மருத்துவர்கள் தங்களால் இயன்றவரையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்" என்று அப்போலோ மருத்துவமனையின் சங்கீதா ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் 2.45 மணியளவில் பதிவிட்டுள்ளார்.
தகவல்:
தி இந்து
|