பந்தய புறாக்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக, காயல்பட்டினத்தில் தனி அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பிலிருக்கும் புறாக்கள் குறித்து ஆர்வலர்களுக்கு விழிப்புணர்வூட்டி, அவ்வினத்தைப் பெருக்கவும் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெறப்பட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினத்தில் பந்தயத்திற்கு தயாராகிவரும் ஹோமர் இன புறாக்கள்!
பண்டைய காலங்களில் அரசர்களால் தகவல் பரிமாற்றத்துக்கு இவ்வின புறாக்கள் பெரிதும் பயன்பட்டது, சுமார் 3000 கிலோ மீட்டர் தொலைவை கடந்து துல்லியமாக இலக்கை அடையும் ஆற்றலுடைய இபுறாக்கள். விஞ்ஞான பரிமானத்தை தொடர்ந்து இவ்வகை புறா வளர்ப்பு கைவிடப்பட்டு ஹோமர் புறாக்களின் இனம் அழிந்து வருகிறது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பெருநகரங்கலானா சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் ஹோமர் இன புறா பந்தயங்கள் நடத்தப்பட்டு, நமது பண்டைகாலா பண்பாட்டை மக்கள் முன் நினைவூட்டி வருகிறது.
காயல்பட்டினம் ரேஸிங் பிஜியன்ஸ் கிளப் (KPRPC) துவக்கம்:
அதன் தொடர்ச்சியாக காயல்பட்டினத்தில் Kayalpatnam Racing Pegions Club (KPRPC) என்ற அமைப்பு தமிழக அரசின் அனுமதி பெற்று கடந்த 1 மே 2016 அன்று துவங்கப்பட்டது.
1. ஹோமர் இன புறாக்களை அழிவில் இருந்து காப்பது
2. ஹோமர் இன புறா பந்தயங்கள் நடத்துவது
3. ஹோமர் இன புறா இனப்பெருக்கத்தை பெருக்குவது
4. நமது பண்னடய கால தமிழ் பண்பாட்டை காப்பது
5. சமுதாய பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுவது
உள்ளிட்ட அம்சங்களை முன்னிறுத்தி காயல்பட்டினம் இளைஞர்களால் துவங்கபட்டது.
அமைப்பின் துவக்கத்தை முன்னிட்டு எட்டையபுரதிலிருந்து காயல்பட்டினம் வரை (80 km Friendly Race) விடப்பட்டது.
சுலைமான் ஸஈத், சுயம்பு, சேகர் ஆகியோரின் புறாக்கள் முறையே 38, 39, 40 நிமிடங்களில் கடந்து சென்று, முதல் மூன்றிடங்களைப் பெற்றன.
ஹோமர் புறா பந்தயம் 2017:
கடந்த 9 அக்டோபர் 2016 அன்று நடந்த செயர்க்குழு கூட்டத்தில்,
பந்தயம் 1- (15 ஜனவரி 2017) மதுரை / காயல்பட்டினம்.
பந்தயம் 2- (29 ஜனவரி 2017) திருச்சி / காயல்பட்டினம்.
என்று பந்தய தேதி மற்றும் இலக்கை நிர்ணனத்து, அமைப்பின் உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுகொள்ளப்பட்டது.
பந்தயத்திற்கு தயாராகிவரும் புறாக்கள்:
பந்தய தேதி மற்றும் இலக்கு அருவிக்கப்பட்டதால் பந்தய புறாக்களின் உரிமையாளர்கள், தங்கள் புறாக்களை பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது, பயிற்சில் சிறந்து விளங்கும் புறாக்கள் பந்தத்தில் கலந்துகொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
அஹ்மத் இஸ்மாஈல் (DHL)
(பொருளாளர் – KPRPC)
|