சவுதிஅரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 98-வது செயற்குழு கூட்டம் கடந்த 25.11.2016 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப்பிறகு மதியம் 01:30 மணியளவில், யான்பு நகரில் உள்ள –கலவா சகோதரர்களின் காயல் இல்லத்தில் வைத்து நடந்தேறிய அந்நிகழ்வுதனை பற்றி அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல ஏக நாயன் அல்லாஹ்வின் அருட்பெரும் கிருபையினால் சவுதிஅரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 98-வது செயற்குழு கூட்டம் யான்பு வாழ் காயலர்களின் ஒன்றுகூடல் நிகழ்வாக கடந்த 25.11.2016 வெள்ளிக்கிழமை
ஜும்மா தொழுகையை நிறைவேற்றிய பிறகு 01:30 மணியளவில், அன்பு சகோதரர்கள் கலவா எம்.ஏ.முஹம்மது அபூபக்கர், எம்.ஏ.முஹம்மது இப்ராஹிம் அவர்களின் காயல் இல்லத்தில் வைத்து நடந்தேறியது.
அந்த செயற்குழுவை நடத்துவதற்கு முன்கூட்டியே அறிவித்தபடி காலை 08-00 மணியளவில் மக்கா மற்றும் ஜித்தா சார்ந்த செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஷரபிய்யா, ஆர்யாஸ் உணவகம் அருகில் ஒன்று கூட மொத்தம் 5 வாகனத்தில் சுமார் 25 நபர்கள் மட்டில் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யான்பு நகர் நோக்கி பயணமாகி இடைவெளியில் ஓய்வுக்காக ரத்வா கோழிப்பண்ணை முகப்பில் அமையப்பெற்ற பள்ளிவாயலில் நிறுத்தப்பட்டு, காயலின் சுவைமிகு சாலா வடை ,உளுந்த வடை மற்றும் தேநீர் சாப்பிட்டு பின் புறப்படவும் சரியாக 12:00 மணிக்கு யான்பு சேர்ந்து ஜும்மா தொழுகையை நிறைவேற்றிக் கொண்டார்கள். மேலும் சிலர் வியாழன் இரவு இஷா தொழுகையை நிறைவேற்றிய பின் மன்றத்தலைவர் சகோ.குளம் அஹ்மது மெய்தீன் தலைமையில் மூன்று வாகனத்தில் யான்பு புறப்பட்டு சேர்ந்து விட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த 98-வது செயற்குழு கூட்டதிற்கு சகோ.எஸ்.எல். முஹம்மது நூஹு ஹாஜி தலைமை பொறுப்பினை ஏற்று நடத்த, சகோ. குளம் அஹ்மது மெய்தீன் நிகழ்வை நெறிபடுத்த சகோ.ஹாபிழ் எஸ்.எம்.சல்மான் பாரிஸ் இறைமறை ஓத கூட்டம் ஆரம்பமானது,
தொடர்ந்து வந்திருந்த அனைவரையும், சிறந்த ஒரு மகத்தான சேவைக்காக இங்கு நாமெல்லாம் ஓன்று கூடி, இந்த மன்றம் ஆற்றும் சிறந்த பணி என்ன என்பதை நம் யான்பு காயல் சொந்தங்களும் காண வேண்டும் என்பதற்காக, பல நூறு மைல்களுக்கப்பால் இருந்து வந்திருக்கும் ஜித்தா, மக்கா சகோதரர்களையும், யான்பு சகோதரர்களையும் அன்பொழுக வரவேற்கிறேன்...அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் என்று அகமகிழ அன்புடன் வரவேற்றார் சகோ. முஹம்மது ஆதம் சுல்தான்.
தலைமையுரை:
நமதூருக்கு ஆற்றும் சிறந்த ஒரு நல்லபணிக்காக, இக்ராம் என்ற பணி செய்வதற்கு நாம் இந்த ஜும்மாவுடைய நாளிலே தொழுகையை நிறைவேற்றி இங்கு ஓன்று கூடியுள்ளோம். ஈமான், தொழுகையை அடுத்து இக்ராம் என்ற இந்த பணிதான் நமது நாயகம் முஹம்மது ஸல்லல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மிகவும் பிடித்தது. எனவே அல்லாஹ் நமக்களித்த இந்த நிஹ்மத்துக்கு நன்றி சொல்லணும், அண்டை அயலாரை பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகள், ஏழைகளின் துயர் நீக்க நாம் உதவும் மனப்பான்மை, வல்ல நாயனுக்காக செய்யும்
இந்த பணிகளின் பிரதிபலன் நமக்கு நாளை மறுமையில் கிடைக்கும். எனவே இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி நாம் தொடர்ந்து இந்த நல்ல காரியத்தை ஒற்றுமையுடன் செய்து வருவோமாக, இதில் ஈடுபடும் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் நல்ல எண்ணங்களையும் தந்து, மேலானா அவனது கிருபையையும் தந்தருள்வானாக ஆமீன். என்று தனது தலைமையுரையை நிறைவு செய்தார். தலைமை பொறுப்பு வகித்த சகோ எஸ்.எல்.முஹம்மது நூஹு ஹாஜி.
மன்றத்தின் செயல்பாடுகள்:
கடந்த நோன்பு இப்தார் நிகழ்வுடன் நடந்த 95வது செயற்குழு மற்றும் 36வது பொதுக்குழு கூட்டத்திற்கு, யான்புவிலிருந்து வந்து கலந்து சிறப்பித்த சகோதர்களுக்கு நன்றி கூறி, கடந்த செயற்குழுவில் நடந்த நிகழ்வுகளையும், வழங்கிய மருத்துவ உதவிகளையும், நிறைவேற்றிய தீர்மானங்களையும் கோடிட்டு காட்டி, இம்மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து மிக தெளிவுடன் எடுத்துக்கூறி அமர்ந்தார் மன்ற செயலாளர் சகோ. சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
அடுத்து பேசிய மன்றத்தலைவர் சகோ. குளம் எம்.ஏ.அஹ்மது முஹியத்தீன் நம்நகரின் கல்விக் கூட்டமைப்பான இக்ரா மற்றும் மருத்துவ கூட்டமைப்பான ஷிபாவின் செயல்பாடுகள், அது இன்று ஆலமரமாக வளர்ந்து நல்ல பலனை நம் மக்களுக்கு தந்து சேவையாற்றி வருகின்றது. அல்லாஹ் நமக்கு பிறருக்கு உதவனும் என்ற நல்ல எண்ணத்தை தந்துள்ளான் மறுமையின் பலனை எதிர்பார்த்து இஹுலாசுடன் நாம் உதவினால், அல்லாஹ்வின் திருப்தி நமக்கு கிடைப்பதுடன், உதவி பெறுபவர்களின் உளப்பூர்வமான பிராத்தனையால் நாம் சிந்தக்கூடிய நமது வியர்வை வீண் போகாது, ஒன்றுக்கு ஆயிரம் மடங்கு நற்கூலி கிடைக்கும். நம் மன்றம் வாயிலாக வறியோர்க்கு உதவும் ஓர் அறிய வாய்ப்பு நம் எல்லோருக்கும் கிடைத்து இருக்கிறது
ஆதலால் அல்லாஹுவின் பொருத்தத்தை நாடி பணிகள் செய்து நாம் நன்மை செய்வோர்களின் கூட்டத்தில் சேர்ந்து இருப்போம் என்று தனதுரையை நிறைவு செய்தார்.
கருத்துரை:
நம் மாணவ மாணவிகள் என்ன மாதிரி கல்விகள் படித்தால் வருங்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும் என்ற ஓர் விழிப்புணர்வு நிகழ்ச்சி காயலில் நடத்திட வேண்டும் என்பது சம்பந்தமாக சகோ.எஸ்.டி. ஷேக் அப்துல்லாஹ் உரையாற்றினார். நமது மன்றம் பல சேவைகளை செய்து வருகிறது. அதில் உன்னதமான சேவை கல்வி. நமது மாணவர்கள் மதிப்பெண் பெறுவது ஒன்றே குறிக்கோள் என்ற அடிப்படையில் உருவாக்கி வருவதை மாற்றி அமைப்பதற்காக Access India என்ற அமைப்பு பல ஊர்களில் விழிப்புணர்வை நடத்தி வருகின்றார்கள்.
மாணவர்கள் எப்படி முறையாக படித்து அதில் வெற்றி காண்பது என்ற (Career Guide) வாழ்க்கை வழிகாட்டி மாணவர்களுக்கு வழங்குவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் எனவே அதனை நம் மன்றம் மூலம் நடத்த வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்தார். அதனை இம்மன்றம் ஏற்றுக்கொண்டு அது சம்பந்தமாக ஆலோசித்து முடிவெடுக்க மன்றத்தலைவர் சகோ குளம் எம்.ஏ. அஹ்மது முஹியித்தீன் தலைவராகவும் சகோ.எஸ்.டி.ஷேக் அப்துல்லாஹ் ஒருங்கிணைப்பாளராகவும்,சகோ. எம்.டபிள்யு. ஹாமித் ரிபாய், சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ், சகோ. ஏ.எம்.செய்யது அஹ்மது மற்றும் சகோ.எம்.எம்.எஸ்.ஷேக் அப்துல் காதர் ஆகியோர்கள் குழு உறுப்பினர்களாகவும் மேலும் இம்மன்றம் சார்ந்த புற்றுக்கு வைப்போம் முற்று என்ற
புற்றுநோய்விழிப்புணர்வு குறுந்தகடு இயக்கி தாயரித்து நல்லமுறையில் வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் பல் சார்ந்த மருத்துவ நிகழ்சிகளை அழகுடன் நடத்தி தந்த மன்றத்தின் முன்னால் செயற்குழு உறுப்பினர் சகோ அல்ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி
இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளராகவும் தெரிவு செய்யப்பட்டு குழு அமைக்கப்பட்டது.
அடுத்து உரை நிகழ்த்திய இம்மன்றத்தின் துணைத்தலைவர் மருத்துவர் ஜியாத் அபூபக்கர் தனதுரையில், இக்ரா மற்றும் ஷிபா அமைப்புகள் நல்ல முறையில் செயலாற்றி வருகிறார்கள். அதன் மூலம் நாம் வறியவர்களுக்கு உதவி வருகிறோம். மேலும் மாணவர்கள் நாம் என்ன படிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். அதனை நாம் இக்ரா மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுப்போம். நாம் செய்யும் இந்த நல்ல பணி அல்லாஹ்விற்கு மிகவும் உகந்தது. நாளை மறுமையில்
அல்லாஹ் நம்மிடம் கேட்பான் உனக்கு கல்வியை ,செல்வத்தை மற்றும் இளமையை தந்தும் அதனை நீ எவ்வாறு செலவு செய்தாய்
பிறருக்கு எப்படி உதவினாய் என்று, எனவே நாம் வறியவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் அதன் பலனால் இறைவன் நம் வாழ்வை சிறப்பாக்கி வைப்பான் என்று நிறைவு செய்தார்.
நம் நகரின் தேவைகளை நிறைவேற்ற நாம் ஓன்று கூடியுள்ளோம், நம் சொந்த வாழ்வில் பல கஷ்ட நஷ்டங்களை கடந்து நாம் வந்துள்ளோம். இந்த நிலை மற்றவர்களுக்கும் வராமல் இம்மன்றத்தின் மூலம் நாம் கை தூக்கி விட வேண்டும். நமது பங்களிப்பை நாம் அதிகம் செய்து, இம்மையில் நாம் செய்யும் உதவியின் பொருட்டால் அதன் பலனை மறுமையில் அடைவோம் என்று தனது கருத்தை பதிவு செய்தார் சகோ பொறியாளர் நெய்னா முஹம்மது.
நிதி நிலை:
மன்ற உறுப்பினர்களால் பெறப்பட்ட சந்தா, நன்கொடைகள், வழங்கப்பட்ட உதவி தொகைகள் தற்போதைய இருப்பு போன்ற
முழு விபரங்களையும் நிதிநிலை அறிக்கையாக சமர்ப்பித்து, நன்கொடைகளை பொது நிதி மற்றும் ஜகாத் நிதி என்று
இருவகையாக வைத்துள்ளோம் அதற்கும் உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டார் மன்றப்பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம்.
மருத்துவ உதவி:
மருத்துவ உதவி வேண்டி ஷிபா மருத்துவ கூட்டமைப்பு மூலமாக வந்த விண்ணப்பங்கள் வாசிக்கப்பட்டு முறையே, விபத்தில் கை, கால் முறிவு, மார்பகம், தொண்டை மற்றும் எலும்பு புற்றுநோய், கண் அறுவை சிகிச்சை, தைராய்டு மற்றும் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை, இடுப்பெலும்பு முறிவு, இருதைய அறுவை மற்றும் முகத்தாடை சீர் அமைப்பு ஆகிய 12 பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவு செய்யப்பட்டு, அனைவரின் பரிபூரண உடல் நலத்திற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
நன்றி நவிலல்:
சகோ எம்.டபிள்யு. ஹாமீத் ரிபாய் நன்றி நவில, சகோ.பிரபு எஸ்.ஜெ.நூருத்தின் நெய்னா துஆ கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறையுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
சகோ . பொறியாளர் நெய்னா முஹம்மது மற்றும் கலவா சகோதரர்களின் அனுசரணையுடன் நாவுக்கினிய காயல் களரிசாப்பாடு பரிமாறப்பட்டது. கூட்ட ஏற்பாடுகளை யான்பு சகோதரர்கள் மிக சிறப்புடன் செய்து இருந்தார்கள்.
மன்றத்தின் அடுத்த 99 வது செயற்க்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் டிசம்பர் 23 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை மக்ரிபு தொழுகைக்குப்பின் வழமைப்போல் ஜித்தா , ஷரப்பியா இம்பாலா கார்டனில் வைத்து நடைபெறும்.
தகவல் மற்றும் புகைப்பட உதவி:
எஸ்.ஹெச்.அப்துல்காதர்
சட்னி, எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
25.11.2016.
|