Re:... posted byVilack sma (jeddah)[09 December 2016] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 44977
மருத்துவ மாணவி முவப்பிகா க்கு வாழ்த்துக்கள் .
உச்ச நீதிமன்ற தீர்ப்பான கட்டாய நுழைவுத்தேர்வு NEET அவசியமான ஒன்று . திறமையானவர்களை இனம் காண்பதற்கு NEET அவசியம் . +2 இல் மாங்கு மாங்கென்று படித்து முதல் மாணவனாக வந்து , கல்லூரிக்கு சென்றால் முதல் வருடம் பெரும்பாலான சப்ஜெட்டுகளில் பெயில் . உண்மையிலேயே திறமையான ஒருவனுக்கு பொதுத்தேர்வில் சற்று குறைவான CUT OFF மதிப்பெண்ணில் மருத்துவத்தில் இடம் கிடைக்காமல் போகிறது . இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்த்து , திறமையானவர்களை மட்டுமே கண்டறிவதற்காகத்தான் NEET .
சந்தியுங்கள் முதல் மாணவனை என்று வருடா வருடம் அவர்களை சந்திக்க வைத்து , குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த பயனையும் நம் மாணவர்கள் அடையவில்லை . இனிமேலும் அந்த முதல் மாணவனை சந்திப்பதில் ( மருத்துவம் பொறியியல் சேர விருப்பம் உள்ளவர்கள் ) அர்த்தமும் இல்லை . நமதூர் மக்களுக்கு நாம் செய்ய வேண்டியது NEET தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை துவக்குவதுதான் . குறைந்தது இரண்டு வருடமாவது பயிற்சி எடுக்க வேண்டும் . அப்போதுதான் ஏதாவது சாதிக்க முடியும் .
வாரத்தில் மூன்று நாட்கள் நாளொன்றுக்கு சுமார் இரண்டு மணி நேரங்கள் வகுப்புகள் எடுத்து மற்ற நாட்களில் பயிற்சிகளுக்கு தேவையானதை கொடுக்க வேண்டும் . மாணவனும் +2 பாடம் மற்றும் NEET பயிற்சி என்று பிசியாக இருப்பான் . +2 அறிவியல் பயிலும் மாணவர்கள் ( NEET பயிற்சி எடுப்பவர்கள் ) just பாஸ் பண்ணினால் போதும் என்ற நிலைதான் இனிமேல் . பெரும்பாலான பள்ளிகளில் மாங்கு மாங்கென்று படித்து மனப்பாடம் செய்வதை சற்று குறைத்து NEET க்கு பயிற்சி கொடுக்கிறார்கள் .
நமதூரில் IQRA போன்ற கல்வி ஆர்வலர்கள் NEET பயிற்சி துவக்கினால் , வரும் காலங்களில் நமதூர் மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர வழிவகை செய்யலாம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross