இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[20 December 2016] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44996
அருமை சகோதரரும்,"முட்டைமாமா" என்று அனைவராலும் அன்பொழுக அழைக்கப்படுபவரும்,எங்களின் இதயத்தில் நீங்கா இடம்பெற்றவருமான இஸ்மாயில் மாமா அவர்களின் மறைவுச்செய்தியை ஜித்தாவிலிருந்து என் மருமகன் ஜாபர்சாதிக் அவர்கள் தொலைபேசியில் சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியுற்றேன்! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன!.
வாகனம் ஒட்டிக்கொண்டிருந்த எனக்கு எதிரே என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் மங்கிய மயக்க நிலையை அடைந்தேன்.ஓரிரு நொடிகளில் என்னையே நான் மறந்துட்டேன்.இதய நோயாளியாகிய நான்,என்னை நான் சுதாரித்து கொண்டு சுய நிலைக்கு வந்தேன்!
சற்று பின்னோக்கிய காலத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறேன்,நான் ரியாதில் அல்ஜிமையா கம்பெனியில் பணிபுரிந்த பொழுது,இஸ்மாயில் மாமா தமாமிலிருந்து ரிலீஸ் பெற்று வேலைதேடி என்னை சந்தித்த பொழுது, நான் என் மேனேஜிரிடம் கூட்டிச்சென்றேன். மேனேஜர் முட்டை மாமாவை பார்த்து விட்டு, சுல்தான்,வயது அதிகம்போல் தெரிகிறதே. வேலை ஒழுங்காக செய்வாரா? என்று வினவினார்.
நான் பொறுப்பு சார், கொடுக்கின்ற வேலையை பொறுப்பாகவும், துரிதமாகவும் செய்வார் என்றேன். OK..ஒரு 3 மதம் வரை பார்ப்போம் சரியாக இருந்தால் தொடரலாம் .இதற்கிடையில் அவர் ஏதம் வேலையில் குளறுபடியாகி ஏற்படும் நஷ்டத்திற்கு நீ பொறுப்பென்றால்,அவருக்கு வேலை கொடுக்க தயார் என்றார்.நானும் அந்த நிபந்தைக்கு ஒப்புதல்
அளித்தேன்!
மாஷா அல்லாஹ் முட்டைமாமா அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறமையாகவும், சாதூர்யமாகவும்,துரிதமாகவும் செய்து உயர் அதிகாரிகள் அனைவர்களின் நற்றச்சாற்றிதழை வெகு விரைவிலேயே பெற்றார். VEHICLE YARD -ன் பெரிய GROUND- டே முட்டைமாமா வின் கண்ட்ரோலில் தான் இருந்தது!.
தவறு செய்யும் மற்றைய ஊழியர்களை கண்டிக்கும்பொழுது, இஸ்மாயிலைப்பார்த்து பொறுப்புணர்ச்சியை கற்றுக்கொள்ளுங்கள் என்று மேலதிகாரிகள் மெச்சும் அளவிற்கு அவர்களின் நன்மதிப்பையும், அவரோடிருந்த அனைத்து நம்மூர் வெளியூர்(குறிப்பாக இலங்கை)மக்களின் மனதிலும் என்றும் நீங்கா இடத்தையும்,அளப்பெரிய அன்பையும் எங்களுக்கு அள்ளித்தந்த முட்டைமாமாவை அல்லாஹ் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டான்! நினைவுகளால் மனம் பதறத்தான் செய்கிறது!
வல்ல அல்லாஹ் முட்டைமாமாவின் அனைத்து பாவங்களையும் மன்னித்து ஆக்கிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை நலக்கியருள்வானாக ஆமீன்!
அன்னாரின் பிரிவுத்துயரில் வதங்கும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை அல்லாஹ் கொடுத்தருள்வானாக ஆமீன்!
குடும்பத்தார்கள் அனைவருக்கும்,என் சார்பாகவும் என் குடும்பத்தார்கள் சார்பாகவும் ஆறுதலடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறோம். அஸ்ஸலாமு அலைக்கும்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான் குடும்பத்தினர்கள்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross