செய்தி: தற்பயன்பாட்டு வாகனங்கள் வாடகைக்குச் செல்வதைத் தடுக்க நடவடிக்கை கோரி, வ.போ.அலுவலரிடம் பாவலர் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்)[20 December 2016] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45000
முதலில் சொந்த வாகனத்தை வாடகைக்கு விடுவது தவறு தான்.
என் வாகனத்தை பலரும் வாடகைக்கு கேட்பார்கள், நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன்.. வருடம் முழுவதும் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும். வீட்டு உபயோகம் இருந்தால் மட்டுமே வண்டி வெளியில் வரும்.
இருந்தாலும், மக்கி மாமா அவர்களின் கருத்து நியாயமானதே.
டீசல் விலை ஒரு ரூபாய் ஏறிவிட்டால் போதும், உடனே அவர்கள் நினைக்கும் வாடகையை கூட்டி கேட்டு விடுவார்கள். அதுவே டீசல் விலை 2 ரூபாய் குறையட்டும்... ஊஹூம் ... கூட்டின வாடகையில் ஒரு பைசா குறைக்க மாட்டார்கள்.
சென்ற முறை, அருகில் இருக்கும் தோப்புக்கு சென்று, மாலை திரும்பி வர அவர்கள் சொன்ன வாடகையை கேட்டு அதிர்ந்து விட்டேன்.
உடனே சகோதரர் ஒருவர் ஆறுமுகநேரி யில் உள்ள ஒரு டிரைவருக்கு போன் அடித்தார், வந்தார், அழைத்து சென்றார், மாலையில் திரும்பி அழைத்து வந்தார். கூடவே மணப்பாடு கடற்கரைக்கும் அழைத்து சென்றார். இவர் கேட்ட வாடகையை கேட்டு மீண்டும் அதிர்ந்து விட்டேன். அவ்வளவு குறைந்த வாடகையை கேட்டார்.
பலமுறை நம்மவர்கள், அருகில் இருக்கும் ஊரில் உள்ள வாகனங்களையே
வாடகைக்கு பயன்படுத்தி வருவதை அவதானித்து வந்துள்ளேன். விபரம் கேட்டால் முதலில் கூறுவது வாடகை அதிகம், அடுத்து மருத்துவமனை போன்ற இடங்களுக்கு சென்று கூடுதல் நேரம் ஆகிவிட்டால், ஓட்டுனர்கள் காட்டும் அவசரமும், தடித்த வார்த்தைகளும் அடுத்த காரணம்.( நல்ல ஓட்டுநர்களும் உள்ளார்கள்).
வாடகையில் ஏன் இவ்வளவு வித்தியாசம்..?
நம் ஊரில் இவ்வளவு வண்டிகள் இருந்தும் மக்கள் ஏன் வெளியூர் வண்டியை நாடுகிறார்கள்..?
ஏன் சொந்த உபயோக வண்டியை நாடுகிறார்கள்.?
இதற்கு விடை அறிந்து, அதை திருத்திக் கொள்ள முயலுங்க சகோதரர்களே..!!
இந்த ஆட்டோ வாடகை கொள்ளையை எழுத ஒரு கட்டுரையே தேவைப்படும். இவர்களுக்கு மணி கட்ட யார் வரப்போகிறார்களோ..?
ஊரில் உருப்படியாக சேவைகள் செய்து மக்களிடம் நன்மதிப்பை பெற்றுவரும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நண்பர்கள் இதில் கவனம் கொள்ளுவார்களா..?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross