தற்பயன்பாட்டுக்காக இயங்கும் வாகனங்களை, வாடகைச் சவாரிக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, காயல்பட்டினம் பாவலர் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச் சங்கம் சார்பில், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பின்வருமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது:-
பாவலர் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச்சங்க தலைவர் எஸ்.என்.முஹம்மத் அலீ, செயலாளர் வி.முத்து ராஜ், பொருளாளர் பேச்சிமுத்து ஆகியோர் ஒருங்கிணைப்பில், அதன் செயற்குழு உறுப்பினர்களான ஏ.ஜெ.நாகூர் யாஸீன், எஸ்.ஷாஃபீ இப்றாஹீம், டீ.தமாசின், வி.ராயன், எம்.சங்கர், ஜெ.ஃபைஸல், எஸ்.முஹம்மத் ஹஸன், எஸ்.எச்.சேக் சுலைமான், பீ.பாலமுருகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் இணைந்து மனுவை அளித்துள்ளனர்.
தகவல் & படங்கள்:
S.N.முஹம்மத் அலீ
|