கேரள மாநிலம் - மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பும், காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பும் இணைந்து, புற்றுநோய் விழிப்புணர்வு முகாமை நடத்தியுள்ளன. பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, மக்வா சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
மலபார் காயல் நலமன்றம் மற்றும் ஷிஃபா இணைந்து நடத்திய முதலாவது கேன்சர் விழிப்புணர்வு முகாம் டிச8-2016 காயல்பட்டனம் ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் யில் வைத்துமன்றத்தின் தலைவர் S N. ரஹ்மதுல்லாஹ் தலைமையில் இனிதே நடைபெற்றது. நிகழ்ச்சியை அல் ஹாஃபிழ் M A C .முஜாஹித் அவர்கள் இறைமறை ஓதி ஆரம்பம் செய்தார்கள்..
வரவேற்புரை:
அரங்கத்திற்கு வருகை புரிந்த அனைவர்களையும் குறிப்பாக நமக்காக நேரம் ஒதுக்கி மக்கள் விழிப்புணர்வடைய இங்கே நிகழ்ச்சி நடத்த சம்மதித்த Dr. பிரதீப் சாலியில் அவர்களையும் அகமகிழ வரவேற்று வரவேற்புரை ஆற்றினார் மலபார் காயல் நல மன்றத்தின் செயலாளர் NM. முஹைதீன் அப்துல் காதர் அவர்கள்.
டாக்டர் குறித்த அறிமுக உரை :
Mkwa வின் முன்னால் செயலாளரும் mkwa வின் தற்போதைய செயற்குழு உறுப்பினருமான சாளை M A K. முகமது உதுமான் அவர்கள் D r பிரதீப் சாலியில் அவர்கள் கல்வி பயின்ற நிறுவனம் குறித்தும் அவர்கள் ஆராய்ச்சி பணி மேற்கொண்ட அமெரிக்காவின் ரோஸ் வெல் பார்க் cancer institution குறித்தும் மேலும் Dr அவர்களின் மருத்துவ துறை சேவை குறித்தும் அவர் மக்களுக்காக நடத்தி வரும் விழிப்புணர்வு முகாம்கள் குறித்தும் தனது அறிமுக உரையில் தெளிவாக எடுத்துரைத்தார்..
நிகழ்ச்சி துவக்கம்:
இந்த விழிப்புணர்வு நிகச்சியினை ஷிபா மெடிக்கல் டிரஸ்ட் யின் தலைவர் D r .இத்ரீஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்
D r பிரதீப் சாலியில் உரை:
மருத்துவத்துறையில் தான் ஆராய்ச்சி மாணவனாக தான் கற்ற விஷயங்களிலும் கேன்சர் நோய் சாதாரண ஒரு மனிதனை எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்வது அதற்குரிய பாரம்பரிய இயற்கையான மருத்துவ முறை என்ன என்பது குறித்து ஆராய்ச்சி மூலம் தெளிவான முறையில் விளக்கமளித்தார்.நாம் உண்ணும் உணவே நமக்கு எதிரியாக எவ்வாறு மாறுகிறது என்றும் அதனை சரிசெய்ய வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் ஆராய்ச்சி முடிவுகளை திரைமூலமாக அவர் எளிதாக புரியும்படி எடுத்துரைத்தார்.
கேள்வி பதில் நிகழ்ச்சி:
D r உரை மற்றும் நோய் சம்பந்தப்பட்ட கேள்விகள் பார்வையாளர்களால் எழுத்து மூலமாக கேட்கப்பட்டது கேட்கப்பட்ட அனைத்த கேள்விகளும் மிகவும் பயனுள்ள மக்களின் நோய் சம்பத்தப்பட்ட தெளிவான கேள்விகளாய் அமைந்தது அனைத்து கேள்விகளுக்கும் நல்ல முறையில் விளக்கம் அளிக்கப்பட்டது ஏறத்தாழ 40ற்கும் அதிகமான வினாக்கள் கேட்கப்பட்டதால் நேரமின்மை காரணத்தால் 40 வினாவோடு நிறுத்தப்பட்டது மேலதிகமான கேள்விகளுக்குDr பிரதீப்@காயல் என்ற whats app குழுமம் மூலமாக விளக்கம் அளிக்கப்படும் என்றும் பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்த பட்டது
ஷிஃபா குறித்த உரை;
ஷிஃபா மெடிக்கல் டிரஸ்ட் யின் செயல்பாடு குறித்து mkwa வின் முன்னால் தலைவரும் தற்போதைய செயற்குழு உறுப்பினர் மேலும் ஷிஃபா வின் அறங்காவலர்S M மஸ்ஊத் அவர்கள் உரையாற்றினர் அவர் தனது உரையில் ஷிஃபா நமது நகர் மக்களுக்காக செய்து வரும் சேவை குறித்தும் மேலும் நடைமுறை படுத்த இருக்கும் செயல் திட்டம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
நன்றியுரை;
Mkwa வின் துணை செயலாளர் A S I. சிராஜ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார் கள் அரங்கத்திற்கு வந்திருந்த அனைவரையும் குறிப்பாக அரங்கத்திற்கு வந்திருந்த மருத்துவர்கள் மேலும் ஒத்துழைப்பு அளித்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்தார்
நிகழ்ச்சியை mkwa தலைவர் S N .ரஹம்துல்லாஹ் கஃபாரா துஆ ஓதி நிறைவு செய்து வைத்தார் நிகழ்ச்சியின் இடையே அனைவர்க்கும் தேனீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை mkwa செய்தி தொடர்பாளர் S N. மீரான் நெறிப்படுத்தினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.N.மீரான்
செய்தி தொடர்பாளர்
மலபார் காயல் நலமன்றம்
“நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்த்து... உணவின் மூலமாகவே நோயை தடுக்க முடியும் என்பதை மிக அருமையாக எடுத்துரைத்தார்கள்” என்று என்னது மனைவி சொன்னார்கள் ... “இது போன்ற நிகழ்ச்சி தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியம்” என்று சொன்னார்கள் .
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் .
நிகழ்ச்சி 30 நிமிடம் தாமதமாக துவங்கியது என்று சொன்னார்கள் .. நமது ஊரு பெண்கள் தங்கள் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து விட்டு , பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பி விட்டு வந்து இருப்பார்கள் .. நிகழ்ச்சி மிக அருமையாக இருந்ததாவும் நடுவில் செல்ல மனம் இல்லை இருந்தாலும் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு பள்ளிக்கூடம் விட்டு வரும் பிள்ளைகளை அழைக்க செல்லவேண்டும் என்றும் மனது கொஞ்சம் ஊசலாடி கொண்டு இருந்ததாவும் சொன்னார்கள் ..
சரியான நேரத்தில் தொடங்கி விட்டால் நிகழ்ச்சி முடிவு கொஞ்சம் காலம் கடந்தாலும் ஒன்னும் தெரியாது .. ஆரம்பம் தாமதித்தால் பார்வையாளருக்கு ஓவ்வரு நிமிடமும் பெரிய நேரம் போல் தெரியும்..
இது போன்ற சிறு சிறு குறைகளை சரி செய்தால் இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் நாம் இது போன்ற நல்ல பல நிகழ்ச்சியை நம் மக்களுக்கு செய்யலாம் ..
சிறப்பு அழைப்பாளர் இந்த நிகழ்ச்சி பற்றி கருத்து கேட்டு அதையும் வெளியிட்டால் மிகவும் நல்லது .. இந்த நிகழ்ச்சி மட்டும் இல்லை நமது ஊரில் நடக்கும் எல்லா நிகழ்ச்சியும் ..
என்றும் அன்புடன் ,
குளம் முஹம்மதுஸாலிஹ் கே.கே.எஸ்
சீசெல் தீவில் இருந்து ..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross