சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குச் செல்லும் காயல்பட்டினம் பொதுமக்களின் மருத்துவச் செலவினங்களில் சலுகையளிக்க - உலக காயல் நல மன்றங்களின் மருத்துவத் துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்பின் சார்பில் சில மருத்துவமனைகளுடன் பேசி, உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஷிஃபா அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டணம் SHIFA Health & Welfare Trust ன் செயற்குழு கூட்டம் சதுக்கை தெருவில் அமைந்துள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் காயல் நகர மக்கள் பயன் பெறும் வகையில், நகர மக்கள் அருகாமையிலுள்ள சில மருத்துவமனைகளில் மேற்கொள்ளும் மருத்துவச் செலவுகளை குறைக்க வழிவகுக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனடிப்படையில் முதற்கட்ட நடவடிக்கையாக,
1,Shifa Hospitals-Tirunelveli
2,Aravind Eye Hospitals-Tirunelveli
3,Dr Jeyasekharan Hospitals-Nagercoil
4,Dr Mahaboobu Subuhani MD (Galaxy Hospitals-Tirunelveli)
ஆகிய மருத்துவமனைகளில் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளும் காயலர்களுக்கு மருத்துவக் கட்டண சலுகையளிக்க SHIFA Health & Welfare Trust ன் சார்பாக அதன் தலைவர் Dr Mohamed Idrees,Janab Mehar Ali (Kayal Ex Member),Janab Abdul Wahidh (HK-Rep) , Janab Salai Nawas (Singapore executive member) ஆகியோர் நேரில் சென்று வேண்டுகோள் வைத்தனர்.
அவ்வேண்டுகோளுக்கிணங்க மேலே குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவமணை நிர்வாகத்தினர் Shifa Trust ன் இத்தகைய (Tie Up) முயற்ச்சியை பாராட்டியவண்ணம் நமதூர் மக்களுக்கு கட்டண சலுகையளிக்க முழு மனதுடன் சம்மதித்துள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).
மேலும் இக்கட்டண சலுகையை பயன்படுத்த விருப்பமுள்ளோர் Shifa Trust இல் சிபாரிசுக்கடிதம் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிஃபா அமைப்பிற்காக...
தகவல்:
A.K.முஹம்மத் இம்ரான்
|