காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் குடிநீர் இணைப்பு கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் நகராட்சி நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி தனி அலுவலர் (பொறுப்பு) அறிவுச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் சார்பாக, புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் வரும் ஜனவரி – 2017 முதல் ஆரம்பமாக இருப்பதால் இது தொடர்பாக ஏற்கனவே உள்ள குடிநீர் இணைப்புகள் (பழைய மற்றும் புதிய இணைப்பு) சீர்படுத்தவும், இணைப்பு இல்லாதவர்களுக்கு இணைப்பு வழங்கவும், கணக்கெடுக்கும் பணி 15-12-2016 முதல் ஆரம்பமாகி உள்ளது.
இத்துடன் படத்தில் உள்ளது போன்ற அடையாள அட்டையுடன் (அந்தந்த வார்டுகளில், அவற்றின் வார்டு எண்களைக் கொண்டு) அலுவலர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு வரும் நபரிடம் தேவையான தகவல்கள் கொடுத்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.பொன்வேல் ராஜ்
(சுகாதார ஆய்வாளர், காயல்பட்டினம் நகராட்சி) |