யார் அந்த கறுப்பாடு? posted bykavimagan kader (dubai)[17 May 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4504
அம்மா அவர்களின் பதவி ஏற்பு விழாவிற்கு, நரேந்த்ரமோடி
வருகை குறித்த நண்பர்களின் ஆதங்கம் மற்றும் கவலையில்
என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலைக்கு காரணமான மோடி, வெகு விரைவில் சட்டப்படி தண்டிக்கப்படுவான் என்று நம்புகிறேன்.
ஆனால் ஒரு விஷயத்தை நண்பர்களிடம் வினவ விரும்புகிறேன்.
நரேந்திர மோடிக்கு எதிரான தீர்மானம் பாராளுமன்றத்தில்
கொண்டுவரப்பட்டபோது, அந்த தீர்மானத்திற்கு எதிராக
வாக்களித்து மோடியைக் காப்பாற்றியது யார்? ஜெயாவா? கருணாவா?
விழாவிற்கு அழைத்து விருந்தளிப்பது முஸ்லிம் விரோதப்போக்கா? அல்லது பாராளுமன்றத்தில் துணைநிற்பதா?
இனத்துரோகிகளை அடையாளம் கண்டுகொண்ட சமுதாயம், முதன்முறையாக அண்ணா.தி.மு.க.விற்கு பெரும்பகுதி வாக்குகளை வாரி வழங்கி இருக்கிறது என்ற ஊடக செய்திகள், இறையருளால் இனி இந்த சமூகத்திற்கு நன்மையையே தரும் என்று நம்புவோமாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross