செய்தி: நகரில் CCTV கேமராக்களைப் பொருத்தல், வாடகை வீடுகளில் குடியிருப்போர் விபரங்களை சேகரித்தல் குறித்து ஜமாஅத் / ஊர் நலக் கமிட்டிகளுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வேண்டுகோள் கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byNizam (India)[05 January 2017] IP: 180.*.*.* India | Comment Reference Number: 45071
சமுக வலைதளங்களின் பலம் முதலில் வெளிப்ட்டது எகிப்தில் கொடுங்கோலன் முபாரக்குக்கு எதிராக வெளிப்பட்டது. இந்தியாவில் அன்னா ஹசாரே ஆரம்பித்த ஊழல் எதிர்ப்பு இயக்கம் பின்னாளில் அம் ஆத்மி கட்சியாக பரிணாமம் எடுத்து ஆட்சியை பிடித்தது முகநூல் வழியாகத்தான்.
ஆக நமதூரில் ஓரு வழக்கு பேச்சு உண்டு. சம்பாதித்தமா? ஊர் பிரச்னை நமக்கு எதற்கு? நிம்மதியாக வாழ்ந்தோமா? இதுதான் வெற்றிகரமான புத்திசாலியான வாழ்க்கை. இதுதான் இஸ்லாமிய வாழ்க்கை என்றால் குர்ஆனும் ஹதிஸும் இறைவன் தந்திருக்க மாட்டான்.
ஓரு தீமையை கையால் தடுக்க வேண்டும முடியாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும் அதுவும் முடியாவிட்டால் அதை நினைத்து வெறுக்க வேண்டும் இதுதான் நபிகளார் காட்டி தந்த வழிமுறை. அதைத்தான் நடப்பது என்ன? வாட்சாப் குழுமம் செய்து கொண்டிருக்கிறது அதற்கு வல்ல ரஹ்மான் கூலி கொடுக்க போதுமானவன்
ஆனால் அதே சமயம் எப்படியாவது இஸ்லாமியர்களை ஓழிக்க நினைக்கும் கூட்டத்தின் கை ஓங்கிய காலமிது. ஓரு விசமி இந்த தளத்தில் புகுந்து ஏதாவது நச்சை பரப்பி அதன் முலம் இந்த தளத்தை முடக்க திட்டம் தீட்டலாம். ஏற்கனவே காயல் இணையத்தை ஓருவர் தாக்கி அறிக்கை விட்டதை நினைவு கூற விரும்புகிறேன். ஆதலால் சட்ட பூர்வமாக இந்த அமைப்பை பதிவு செய்வதும் மாடரேசனை உண்டாக்குவதும அவசியம்.
இந்த தளம் நமதுர் கலசாரத்துக்கு ஏற்ப ஆணகளோடு கலக்காமல் பெண்களும் ஓரு தளத்தை ஏறபடுத்தி செயல்பட வேண்டும்.
அதுபோல நமதுரில் பனை மர அழிப்பு
புற்றீசல் போல செல் டவர்கள்தெ
ருக்களிலும் பஜாரிலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலான ஆக்கிரமிப்பக்கள் நகராட்சி அனுமதி வாங்காமல் அதிக உயரத்தில் கட்டப்பட்ட வேகத்தடைகள்
பக்கத்து ஊரை கணக்கில் எடுத்து அதக விலைக்ு விற்கப்படும் பொருட்கள்
குறைந்தபட்சம் இரணடு வருடமாவது ஊரில் சேவை செய்ய இளைய சமுதாய மருத்துவரகளை வலியுருத்தல்
போன்றவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டும்
அதுபோல தொழில் வளர்ச்சி இளைய சமுகத்தில் நல்ல குணாதிசயங்களை வளரத்தல் அவசர மருத்துவ கல்வி உதவி போன்றவற்றுக்கும் தனி பிரிவு ஏறபடுத்தி பணிகளை விரிவு செய்ய வேணடும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross