செய்தி: காயல்பட்டினத்தில் SET TOP BOX க்காக 1200 ரூபாய் வசூல்! பொது மக்கள் கவனத்திற்கு நடப்பது என்ன? குழுமம் செய்தி அறிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நல்ல விஷயங்களை பாராட்டுவோம் posted bymackie noohuthambi (kayalpatnam )[16 January 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45125
இந்த குழுமத்தில் இப்போது வெளியிட்டுள்ள செய்தி ஒரு நல்ல விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.
நான் கேபிள் டிவி யினர் 70 க்கு பதிலாக 100 ரூபாய் வசூல் செய்கிறார்களே, இதை அவர்களிடம் கேட்டால் 100 தரவில்லை என்றால் லைனை கட் பண்ணி விடுவோம் என்று சர்வ சாதாரணமாக modi type பில் பதிலாக வருகிறது.
இந்த செய்தியை நடப்பதென்ன குழுமத்தில் உள்ள சகோதரர் சாலை நவாஸ் அவர்களிடம் முறையிட்டேன். அவர்கள் சொன்ன பதில், என்ன செய்ய நாங்களும் சொல்லி பார்த்துவிட்டோம், எங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடப் பார்க்கிறீர்களே என்று நமதூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சொல்கிறார்களாம். அவ்வளவு மோசமான நிதி நெருக்கடியில் இருக்கிறார்கள் ? என்று தெரிகிறது. அப்படியானால் நாம் அவர்களுக்கு உதவி செய்யத்தான் வேண்டும். அல்லாஹ் அந்த மோசமான நிலையில் நம்மை வைக்கவில்லை என்று எனது மனைவியிடம் நான் கூறினேன்.
நேற்று நடந்த ரஹ்மத்துல் லில் ஆலமீன் பேரியத்தில் உரையாற்றிய வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் கண்ணியத்துக்குரிய அப்துல் ஹமீது மௌலவி அவர்கள் தலைப்பே, பெருமானாரின் அணுகு முறை பற்றியதுதான். POSITIVE APPROACH என்று நான் ஆங்கிலத்தில் ஒரு நூல் படித்தேன். ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் தான் இந்த POSITIVE APPROACH இன் பிதாமகன் என்று மிக தெளிவாக சொன்னார்கள். ஈமான் கொண்ட இஸ்லாமிய நபி தோழர்களிடத்திலும் ஈமானை எதிர்த்த காபிர்களிடத்திலும் அவர்கள் காட்டிய இந்த அணுகுமுறைகள் நம்மை அதிர வைக்கிறது. எதிர்மறையான எண்ணத்தை வெளிப் படுத்துபவர்களிடமும் நேர்மறையாக பேசி அவர்களை வென்றவர்கள் நபிகள் நாயகம்.
உலமாக்களும் மார்க்க விற்பன்னர்களும் அறிவு ஜீவிகளும் நிறைந்து காணப்படும் நமது ஊரில் இந்த POSITIVE APPROACH நம்மிடையே குறைந்த விழுக்காடுகள் தான் இருப்பதாக தெரிகிறது. எனவே யார் எந்த குழுமத்தில் இருந்தாலும் அவர்கள் செயல்பாடுகள் பொது மக்களின் நலனை நோக்கி பயணிக்க வேண்டும். என்பதுதான் நமது எதிர்பார்ப்பு.. உங்கள் விழிப்புணர்வு பயணங்கள் அந்த வழியில் தொடர வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross