இது வெறும் ஜல்லிக்கட்டு போராட்டம் ம்,மட்டுமல்ல! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! : (yanbu)[21 January 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45146
"ஜல்லி கட்டு" இதையொரு சாதாரண விளையாட்டாக எடுத்திக்கொள்ள முடியாது.பலநூறு ஆண்டுகளாக விளையாடிய வீர வளையாட்டு..
இதில் பல சரித்திர உண்மைகள் அடங்கியுள்ளன .வீரத்தமிழனின் வேகத்தின் வெளிப்பாடு இவ்வீர விளையாட்டில் தமிழனின் பல கலாச்சார சங்கதிகள் சங்கக்கமாகி ,அதிலிருந்து வெளிவரும் ஓவ்வொரு நிகழ்வுகளையும்தங்களின் உயிருக்குயிராய் நேசித்து நீண்டாண்டுகளாய் நிலை நிறுத்திவரும் தமிழினம்!
அப்படிப்பட்ட தமிழர்களின் பண்புகளை,பாரம்பரியத்தை,கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த வீர விளையாட்டை "ஏதோ ஒரு விளையாட்டு" இதை நிறுத்தினால் என்னவாகப்போகிறேது, எதோ ஒருசில கிராமத்தவர்கள் கத்துவார்கள் அதன்பின் அடங்கி விடுவார்கள் என்று ஏளனகணக்குப்போட்ட மாநில,மத்திய அரசுகளின் முதுகெலும்பு முறிக்கிறமாதிரி,
நிமிர்ந்து நின்று,நேற்றுவரை நிதானத்துடன் பொறுத்தேண்டா இத்தமிழன், ஆனால் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதற்கேற்ப இன்றுமுதல் "பொங்கி எழுந்து விட்டேண்டா" என்று பாருக்கு பறைசாற்றும் பச்சைத்
தமிழனின் வீறுகொண்டெழுந்த போராட்டம்!
எங்களை அடக்க இந்த மாநிலம் என்ன,இந்த இந்தியா என்ன இந்த உலகமே ஒன்றுதிரண்டாலும் ஒரு அணுவளவுகூடஆட்டமுடியாது ,அசைக்க
முடியாது என்பதை இவையகம் பார்த்து பிரமித்து நிற்கிறது!
நாங்கள் சாதி,மதம்,இனம் என்ற எந்த மாச்சரியமும் இல்லாமல் ஒருதாய் பெற்ற பிள்ளைகளாய் ஒன்றிணைந்திருக்கிறோம் .எங்களை விரட்ட
இருள் பாய்ச்சினாலும்,ஏவலர்களை விட்டு விரட்டியடித்தாலும்,எல்லா பாதைகளையும் மூடி,எந்தவித உணவு,நீர் விநியோகத்தை தடை செய்தாலும்,எங்களின் இறுக்கமான உறுதியான ஒற்றுமையை உடைத்தெறிக்க முடிந்ததா?
மெரினாவில் கும்மிருட்டில் குமிந்திருந்த ஆயிரமாயிர குமரிப்பெண்களை தன் தாயின் சகோதிரிகளாய் எண்ணி பாதுகாத்த பண்புமிகு, பாசமிகு தமிழனை இந்த பாரே பாராட்டுகிறது!
இது ஒரு வீர விளையாட்டிற்காகவும் மட்டும் வெகுண்டெழுந்த கூட்டமல்ல எத்தனையோ காலங்கள் பொருத்திருந்த துன்பங்களுக்கும், துயரங்களுக்குமொரு விடைகாணும் எழுச்சிபோராகும்!
நாட்டில் எத்தனையோ சீரகேடுகள்,காவேரியில் கர்நாடகத்தான் நீர்இல்லை என்கிறான் கொத்து,கொத்தாக தினம்,,தினம் விவசாயி செத்து மடிகிறான், விலைவாசி விண்ணைத்தொடுகிறது.இதில் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தங்கள் பதவி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு தரையில் படுத்துருண்டாவது தன் பதவி சுகத்தை பாதுகாக்கத்துடிக்கும் ஆட்சியாளர்கள் அனைவர்களுக்கும் ஆப்பு அடிக்க ஆயத்தமான அறவழி போராட்டம்தான் இந்த போராட்டம்!.
ஆகாய அதிகாரம் எனக்குள்ளது,,எவரும் என்னை அசைக்க முடியாது என்கின்ற இருமாப்புடன் ஓவ்வொரு நாளும் தன்னிச்சையாக சர்வாதிகார அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்து அதனால் துன்புறுபவர்களைப்பற்றி துரும்பளவுவிகூட சட்டை செய்யாத சண்டாளர்களுக்குறிய சாவு மணியோசைதான் இந்த தமிழக தன்மானசிங்கங்களின் தணியாத எழுச்சி போராட்டமாகும்! இது ஆரம்பம்தான், என்றும்நிற்கப்போவதில்லை,இந்த நாசக்காரர்களின் அத்துணை,அநியாயங்ககளும் ,அட்டூழியங்களும் அடங்கும் வரை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross