செய்தி: காயல்பட்டினத்தில் காவல்துறை வேண்டுகோளை ஏற்று முடிக்கப்பட்டது ஜல்லிக்கட்டு தடை நீக்கக் கோரும் தொடர் முழக்கப் போராட்டம்! நேற்று கருப்புத் துணியால் கண்களைக் கட்டி கண்டன முழக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...போராட்டக் களம் போர்க் களமாக மாறாக கூடாது posted bymackie noohuthambi (kayalpatnam )[23 January 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45148
தமிழ் பேசும் மக்களின் நியாயமான உணர்வுகளை புரிந்து கொண்டு மத்திய அரசும் மாநில அரசும் ஒரு முடிவுக்கு வந்து ஒரு அவசர அரசாணை மூலம் ஜல்லி கட்டு நடத்த எல்லா உதவிகளையும் செய்ய முன்வந்திருக்கிறது. நிரந்தரமாக ஜல்லிக் கட்டு நடக்கும் என்று முதல்வர் உத்தரவாதமும் தருகிறார். இந்த சூழ்நிலையில் போராட்டத்தை முடித்துக் கொள்வது ஒரு நல்ல முன்மாதிரி.
அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் இதில் குளிர் காய நிறைய இருக்கிறது. இரண்டு ஆடுகள் மோதிக் கொள்ளும்போது அதிலிருந்து வழியும் இரத்தத்தைக் குடிக்க ஓநாய்கள் ஆவலுடன் காத்திருக்கும். இளைஞர்கள் மாணவர்கள் அந்த ஓநாய்களின் இலக்கை முறியடித்து தங்கள் தனி தன்மையை வெளிப் படுத்தி இருக்கிறார்கள்.
சென்னையிலும் பிற ஊர்களிலும் நேற்றுவரை மாணவர்கள் அற போராட்டத்தில் ஈடுபட்டு அமைதியாக அவர்கள் போராட்டத்தை நடத்தினார்கள் என்று எல்லோரும் வியந்து பாராட்டினார்கள். ஆனால் இன்று போராட்டக் களங்கள் போர்க் களங்களாக மாறியிருக்கிறது சென்னை போன்ற இடங்களில்.இது வேதனைக்குரிய விஷயம்.
உரிமைக்கு குரல் கொடுப்போம் உறவுக்கு கரம் கொடுப்போம் என்ற கோக்கையைத்தான் பின் பற்ற வேண்டும். அரசியல்வாதிகளின் கைப் பாவையாக ஆகிவிடக் கூடாது.
அந்த வகையில் நமதூர் மக்கள் எடுத்துள்ள முடிவு நிம்மதி தருகிறது.
NEET போன்ற விஷயங்கள் மாணவர்களுக்கு உள்ள பிரச்சினை. வறட்சி போன்ற விஷயங்கள் விவசாயிகளுக்கு உள்ள பிரச்சினை. பொது சிவில் சட்டம் என்பது முஸ்லிம்களுக்குள்ள பிரச்சினை.காவேரி தண்ணீர் பிரச்சினை தமிழக மக்களுக்கு உள்ள பிரச்சினை. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கம் இந்தியா முழுவதும் உள்ள பிரச்சினை. எல்லா பிரச்சினைகளையும் உண்டாக்கி விட்டு மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
திடீரென்று இந்த ஜல்லிக் கட்டு பிரச்சினை எப்படியோ வந்து எப்படியோ முடிந்திருக்கிறது. ''ஜல்லிக் கட்டு இது ஒரு டெல்லிக் கட்டு'' என்று தமிழ் ஹிந்து நாளிதழில் சமஸ் அவர்கள் கட்டுரையை எல்லோரும் படிக்க வேண்டும்.
இளைஞர்களின் வேகம் தடை மீறி செல்லும்போது பெரியவர்களின் விவேகம் அதை தடுத்து நிறுத்த வேண்டும். அதைத்தான் நமதூர் பெரியவர்கள் செய்து காவல்துறையுடன் சமரசம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross