அதிர்ச்சியளிக்கும் செய்தி posted bymackie noohuthambi (kayalpatnam )[24 January 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45150
தீர்மானம் 3 இல் வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. திருட்டுக்கு குற்றங்களில் முஸ்லீம் சிறுவர்கள் ஈடுபடுவதாக தகவல் நிரூபிக்கப் பட்டுள்ளது மன வேதனை அளிக்கிறது.
நபிகள் நாயகம் அவர்கள் காலத்தில் ஒரு திருட்டுக் குற்றத்துக்காக செல்வ செழிப்பில் சமூக அந்தஸ்தில் இருந்த பாத்திமா என்ற ஒரு பெண்ணுக்கு தண்டனை வழங்கப் படுகிறது. அந்த தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் அவளை மன்னித்து விடுங்கள் அவள் உயர் குலத்தில் பிறநதவள் எங்களுக்கு மிகவும் வேண்டியவர்களின் பெண் என்றெல்லாம் நபிகள் நாயகம் அவர்களிடம் பரிந்துரை செய்ய செல்வாக்கு மிக்கவர்கள் வந்தார்கள் அவர்கள் சொல்வதை கேட்டு கருணையே உருவான நபிகள் நாயகம் முகம் சிவந்தார்கள்.
அல்லாஹ்வுடைய சட்டத்தில் நீங்கள் கை வசிக்கிறீர்களா...என் உயிர் எவன் வசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக எனது மகள் பாத்திமா திருடி இருந்தாலும் அவளது கரத்தை வெட்டி விட நான் தயங்க மாட்டேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் இப்படி சட்டங்களை வளைத்து தீர்ப்பு வழங்கியதனால்தான் நாசமாகி விட்டார்கள் என்ற கருத்துப்பட கூறி அந்த பெண்ணுக்கு தண்டனை வழங்கினார்கள் என்ற செய்திகள் ஹதீத் கிரந்தங்களில் காணக் கிடைக்கிறது.
நமது பிள்ளைகளுக்கு குறிப்பாக முஸ்லீம் சிறுவர்களுக்கு மார்க்க கல்விகள் போதனைகள் செய்வதை நாம் கண்டு கொள்வதில்லை. அவசர அவசரமாக பள்ளி கூடத்துக்கு அனுப்புகிறோம். ஆனால் அதிகாலை எழுந்து தொழுவது குர் ஆன் ஓதுவது மார்க்க கல்விகளை போதிப்பது இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதைவிட அதை ஒரு பொருட்டாக கூட நினைப்பதில்லை. இதனால் இப்படி வார்த்தெடுக்கப்படும் குழந்தைகள் வளர்ந்து வரும் இளைஞர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்களாக மாறுகிறார்கள். அல்லாஹ் பாத்து காக்க வேண்டும்.
KPRPC நமதூரில் நடக்கும் திருட்டுக்களை தடுக்க எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் பெரியவர்கள் சமூக ஆர்வலர்கள் பொது நல தொண்டு நிறுவனங்கள் தங்களால் ஆன உதவிகளையும் அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
உங்களது முயற்சிகளில் அல்லாஹ் வெற்றியை தருவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross