காயல்பட்டினம் பிஜியன் ரேஸிங் க்ளப் சார்பில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், நகரில் திருட்டுக்களைத் தடுக்க செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த - அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
நகரில் திருட்டுகளை தடுக்க KPRPC கூட்டத்தில் செயல்திட்டம்:
கடந்த 15 ஜனவரி 2017 ஞாயிறு அன்று காயல்பட்டணம் ரேஸிங் பீஜின்ஸ் கிளப்பின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள KPRPC பதிவு அலுவலகத்தில் KPRPC அமைப்பின் தலைவர் அசார் தலைமையில் நடந்தேறியது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.
தீர்மானம் 1. பந்தய கட்டணம்:
மதுரை - காயல்பட்டணம் 164 km வரையிலான பந்தயதுக்கு கட்டணமாக நபருக்கு ரூ.1000 (5 புறாக்களுக்கு மட்டும்) 5துக்கு மேற்பட்ட ஒவ்வொரு புறாவிற்கும் ரூ 50 கட்டணம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
தீர்மானம் 2: Ring 2017 ஒரு நபருக்கு குறைந்தது 20 வாங்கவேண்டும்.
தீர்மானம் 3: நகரில் திருட்டை தடுப்பது :
காயல்பட்டணத்தில் பலஆண்டுகளாக பல்வேரு இடங்களில் விலையுயர்ந்த புறாக்கள், இருசக்கர வாகனங்கள்,கால்நடைகள்,பெட்ரோல் போன்ற சிறு திருட்டுகலும், புட்டியிருக்கும் வீடுகள், கடைகள் கொள்ளை போன்ற பெரிய திருட்டுகளும் நடைபெறுகிறது, புட்டியிருக்கும் வீடுகள், கடைகள் கொள்ளை போன்ற பெரிய திருட்டுக்களில் பிடிபட்ட திருடர்கள், புறாக்கள், பெட்ரோல் போன்ற சிறு திருட்டுகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபடுவது பெரும்பாலும் முஸ்லீம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என்பதுதான் நமக்கு மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தி.
இந்த நிலை தொடர்ந்தால் முஸ்லீம் இளைஞர்கள் மார்க்கப்பணிகளை விட்டுவிட்டு, பிற்காலங்களில் சமூக விரோதிகளாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
இது போன்ற நிலை நமது நகரில் நடக்காமல் தடுக்க முதல்கட்டமாக நமது அமைப்பில் இருக்கும் உறுப்பினர்கள் வீட்டில் திருட்டு ஏற்பட்டால் , KPRPC அமைப்பின் சார்பில் காவல் நிலைத்தில் புகார் கொடுத்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க அரசை வலிறுத்தவேண்டும், ஊடகங்களை அழைத்து பேட்டி அளிக்கவேண்டும், திருட்டு சம்மந்தமாக ஊடகங்களில் செய்தி வெளியிட வேண்டும்,
நகரில் திருட்டு சம்மந்தமாக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு KPRPC அமைப்பின் சட்ட ஆலோசகர்களால் நீதிமன்றத்தில் வழக்காடவேண்டும்.
தீர்மானம் 4. புதிய உறுப்பினர்களை சேர்த்தால்:
நகரில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களை சந்தித்து அழிந்து வரும் ஹோமர் இன புறாக்களை பாதுகாப்பது நகரில் திருட்டு மற்றும் நகரில் திருட்டை தடுக்கும் நமது அமைப்பின் முயற்சியை பற்றி எடுத்துறைது அவர்களை KPRPC யில் இணைப்பது.
நமது அமைப்பில் இணைய விரும்பும் நபர் புறா வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தீர்மானம் 5: திட்டமிட்டபடி எதிர்வரும் 20-1-2017 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி அளவில் நமது பண்பாட்டின் அடையாளமான புறா பத்தியம் நடைபெறும்.
அடுத்த கூட்டம் மதுரை - காயல்பட்டணம் பந்தியத்திற்கு பிறகு அறிவிக்கப்படும்.
இது அழிவின் விழும்பில் இருக்கும் இவ்வினதை காக்கும் முயற்சி.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|