தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரியும், PETA அமைப்புக்குத் தடை கோரியும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், “ஜல்லிக்கட்டு போராட்டம் உணர்த்தும் செய்தி என்ன?” எனும் தலைப்பில், எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்பின் சார்பில், இன்று மாலையில் விவாத அரங்கு நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
ஜல்லிக்கட்டு போராட்டம் – உணர்த்தும் செய்தி என்ன ? விவாத அரங்கு
எழுத்து மேடை மையம் தமிழ் நாடு இன் 16 ஆம் நிகழ்வு
அன்பார்ந்த காயல்வாசிகளே ! அஸ்ஸலாமு அலைக்கும் !!
தமிழகம் முழுக்க தன்னெழுச்சியாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெறுமனே மண்ணின் மரபைக்காக்கும் தற்காப்பு முயற்சி என சுருக்கி பார்க்க முடியாது.
களத்திலிருந்து வரும் தகவல்கள் இந்த போராட்டத்திற்கு பல்வேறு பரிமாணங்களும் கோணங்களும் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றன.
இது தொடர்பான விரிவான சுவையான பல முனை விவாத அரங்கிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
-----------------------------------------------------------------------------------------------
நாள் : 22 / 01 / 2017
நேரம்: மாலை : 06:50
இடம் : ஹனியா சிற்றரங்கம்
துஃபைல் வணிக வளாகம்
விளக்கு டிரேடர்ஸ் எதிரில்
ஹாஜி அப்பா தைக்கா தெரு
காயல்பட்டினம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: +91 91713 24824
|