Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:37:58 PM
புதன் | 4 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1952, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5912:1215:3218:0319:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:18Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:56
மறைவு17:57மறைவு20:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0405:3005:56
உச்சி
12:08
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2018:4619:12
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18715
#KOTW18715
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 24, 2017
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4219 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் - தை.மு.க.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் (பேஷ் இமாம்), இன்று 11:00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 95. அன்னார்,

பூவார் நூஹ் வலிய்யுல்லாஹ், செய்யித் அஹ்மத் வலிய்யுல்லாஹ், இராமேஸ்வரம் முஹம்மத் இஸ்மாஈல் வலிய்யுல்லாஹ், பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ், மஹான் ஹாமிது லெப்பை ஆலிம் வலிய்யுல்லாஹ் ஆகியோரின் வழித்தோன்றலில் வந்த திருப்பேரரும்,

மர்ஹூம் தை.மு.க.முஹம்மத் இஸ்மாஈல் அவர்களின் மகனும்,

மர்ஹூம் நூ.கு.முஹம்மத் மீரா ஸாஹிப் (மூசக்கவி - கான்ஸ்டபிள்) அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் தை.மு.க.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஆலிம் பக்ரீ, மர்ஹூம் தை.மு.க.செய்யித் இப்றாஹீம், மர்ஹூம் தை.மு.க.அபூபக்கர் ஸித்தீக், மர்ஹூம் தை.மு.க.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் ஆகியோரின் சகோதரரும்,

டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், டீ.எஸ்.ஏ.முஹம்மத் மீரா ஸாஹிப் ஆகியோரின் தந்தையும்,

ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.ஜஸீமுல் பக்ரீ ஆலிம், டீ.எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா, டீ.எஸ்.ஏ.அத்தீக் ஆகியோரின் சிறிய தந்தையும்,

எஸ்.எம்.பி.முஹம்மத் இஸ்மாஈல், எஸ்.எம்.பி.மஹ்மூத் ஷம்சுத்தீன் ஆகியோரின் பெரிய தந்தையும்,

எஸ்.ஏ.முஹம்மத் அப்துல் காதிர் என்ற செ.யி., எஸ்.ஏ.பாதுல் அஸ்ஹப், ஹாஃபிழ் எச்.எல்.முபாரக் ஜின்னா ஆகியோரின் தாய்மாமாவும், எம்.எம்.முஹம்மத் நூஹ், எம்.எம்.செய்யித் முஹம்மத், எம்.எம்.முஹம்மத் ஹனீஃபா ஆகியோரின் மச்சானும்,

மர்ஹூம் கத்தீபு முஹம்மத் இப்றாஹீம் அவர்களின் சகளையும்,

ஹாஃபிழ் எச்.எல்.முஹம்மத் அப்துல் காதிர், பிரபு கே.எஸ்.முஹம்மத் தாஹா ஆகியோரின் மாமனாரும்,

பிரபு எம்.காதிர் சாமுனா லெப்பை, எம்.ஐ.ஷெய்கு அப்துல்லாஹ் ஸாஹிப், எம்.ஐ.ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபீ, எம்.எஸ்.ஷெய்கு அப்துல்லாஹ் ஸாஹிப், மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, அன்று 20.30 மணியளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

படம்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்


[விரிவான தகவல் & படம் இணைக்கப்பட்டுள்ளது @ 11:15 / 26.01.2017.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S .I .ஜியாவுத்தீன் (அல்கோபர் ) [24 January 2017]
IP: 94.*.*.* Romania | Comment Reference Number: 45153

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை S .I .ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [24 January 2017]
IP: 5.*.*.* | Comment Reference Number: 45154

..இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பாவ பிழைகளையும் மன்னித்து மேலான சுவனபதியில் நல்லோர்களின் கூட்டத்தில் இணைத்து வைப்பானாக . ஆமீன் ...

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [24 January 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45155

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்லநாயன் எங்கள் உஸ்தாத் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய ஜன்னத்துல் பிர்தௌஸில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அவர்கள் உற்றார் உறவினர், அவர்களின் மாணவர்கள் மற்றும் நம் அனைவருக்கும் ஷப்ரன் ஜமீலா எனும் பொறுமையை தந்தருள்வானாக-ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [24 January 2017]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45156

CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.

ஆதாரம் :- புகாரி -7377

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen!

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by ceylon fancy kazhi. (mayiladuthurai.) [25 January 2017]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45158

..இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பாவ பிழைகளையும் மன்னித்து மேலான சுவனபதியில் நல்லோர்களின் கூட்டத்தில் இணைத்து வைப்பானாக . ஆமீன் ...

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

சிலோன் பேன்சி காழி ,
மயிலாடுதுறை ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH - KSA) [25 January 2017]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45159

கண்ணியத்திற்குரிய எங்கள் ஆசிரிய தந்தை ஷைக் அப்துல்லாஹ் பேஷ் இமாம் அவர்களின் மறைவு அதிர்ச்சியும் மிகுந்த கவலையும் தந்தது.

அவர்கள் ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனம் துவக்கிய காரண கர்த்தா ஆவார்கள் . அருள் மறையாம் திரு குர்ஆனை ஆரம்பம் முதல் இறுதி வரை அன்னவர்களிடமே ஓதி முடித்தேன்.என் போன்ற சக நண்பர்கள் அவர்களிடம் கால் மடித்து குர் ஆன் ஓதுவது மற்றுமல்லாது அடிப்படை மார்க்க கல்வி, தொழுவது எப்படி என்ற முறைகளை சின்னங்சிறு பருவத்தில் பசுமரத்தாணி போல் பதிய வைத்தார்கள்.அதே போன்று ஒழுக்க நெறி முறைகள் போதித்த மகான் . அவர்களிடம் பயின்ற மாணவர்கள் இன்று தலை சிறந்த ஆலிம்களாக ஹாபிழ்களாக இருக்கிறார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னவர்களின் மண்ணறையை பிரகாசமாகி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனபதி புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன்.

எங்கள் உஸ்தாது அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் யாவருக்கும் அல்லாஹ் மேலான ஸபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இமாமாக முன்னின்று வழிநடத்துவதில் தனிச்சிறப்புடன் திகழ்ந்தவர்கள்
posted by S.K.Shameemul Islam (Chennai) [25 January 2017]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 45160

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கணீரென்ற குரல்
கோர்வையான உச்சரிப்பு
வசனங்களை உச்சரிப்பதில் கம்பீரம்
அழகிய பாங்கு
சாந்ததமான தரிப்புகள்

என தொழுகையை இமாமாக முன்னின்று வழிநடத்துவதில் தனிச்சிறப்புடன் திகழ்ந்தவர்களான மறைந்த பாசத்திற்குரிய எம்பள்ளியின் முன்னாள்இமாம் அவர்களை பார்த்தாலே மதிக்கத்தோன்றும்.

நன்னடத்தை
சந்திப்பவர்களிடமெல்லாம் புன்முரவலிட்டு உரையாடும் குணம் என வேறுபல நற்பண்புகளையும் கொண்டிருந்தார்கள்.

என்போன்ற வயதில் உள்ளவர்கள் பள்ளிப்பருவத்தில் இருந்தபோது இறைநேசத்தையும் இறையச்சத்தையும் பெறுவதற்கான பெரிய முன்மாதிரியாகவும் திகழ்தார்கள்.

மேலோன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து பாவங்களை மன்னித்து செய்த எல்லா நல்அமல்களையும் ஏற்றுக்கொண்டு எண்ணிலடங்கா நற்கூலிகளை வழங்குவானாக.

கப்ரின் வாழ்வை பூங்காவனமாக்கி உயரிய சுவனச்சொளைகளில் நல்லோர்களுடன் ஒன்றாக்கி வைப்பானாக, ஆமீன். மர்ஹூமின் குடும்பத்தவருக்கு அமைதியையும் இழப்பை தாங்கிக் கொள்ளும் பொறுமையையும் வழங்குவானாக.

எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம்
& குடும்பத்தார்கள்.
எஸ்.கே.இல்லம. கொச்சியார் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [25 January 2017]
IP: 101.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45162

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பும் மரியாதையும் நிறைந்த அப்பா TMKஷெய்க் அப்துல்லா பேஷ்இமாம் அவர்களின் வபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.40 வருடகாலம் நமது முஹல்லா குருவித்துறைப்பள்ளியில் இமாமாக பணியாற்றினார்கள்.திறமையான ஹாஃபிழ்களை உருவாக்கினார்கள்.அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.

அன்னாரின் மக்களுக்கு ஸபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [25 January 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45163

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பாவ பிழைகளையும் மன்னித்து மேலான சுவனபதியில் நல்லோர்களின் கூட்டத்தில் இணைத்து வைப்பானாக . ஆமீன் ...

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்!

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...பேஷ் இமாம் - அவர் அதிகம் பேசாத இமாம்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [25 January 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45165

இன்றிரவு குருவிதுறைப் பள்ளி முன்னாள் இமாம் ஷேக் அப்துல்லாஹ் ஆலிம் அவர்கள் வீட்டில் கத்முல் குர் ஆன் ஓத சென்று விட்டு திரும்பும்போது அவ்வளவு கூட்டத்திலும் ஒரு ஓரமாக நின்ற என்னை ஒரு சகோதரர் அடையாளம் கண்டு கொண்டு கொண்டு

''என்ன பேஷ் இமாம் அவர்கள் பற்றி உங்கள் பதிவுகளை காணவில்லையே அதை மிகவும் எதிர்பார்த்தேன்'' என்றார்.

உண்மைதான் சிலர் மனங்களில் சிலர்களின் தாக்கம் நம்மையும் அறியாமலே படர்ந்திருக்கும். அது நமக்கே தெரியாது. பேஷ் இமாம் அவர்களும் அப்படி பட்டவர்கள்தான். குருவிதுறைப் பள்ளி பேஷ் இமாமாக என் நினைவு தெரிந்த காலம் முதல் சில வருடங்கள் வரை அவர்கள் அந்த ஏரியாவில் வலம் வந்தது எனக்கு தெரியும். எங்கள் முஹல்லாவில் நடக்கும் சுக துக்கங்கள், விழாக்கள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்கள். நிகழ்ச்சியை து ஆ ஓதி ஆரம்பித்து வைப்பார்கள் அல்லது அந்த நிகழ்ச்சியை து ஆ ஓதி முடித்து வைப்பார்கள். அதிகம் பேச மாட்டார்கள். அவர்கள் நடையும் கூட பூமிக்கு வலிக்காத நடைதான். சதுக்கை தெருவிலிருந்து சொலுக்கார் தெருவுக்கு நடப்பதென்றாலே எவ்வளவு கஷ்டமாக தெரிகிறது இந்த காலத்தில். ஆனால் வாழ் நாளில் அதிகம் நடந்து இந்த நடை பயணத்தில் வெற்றி கண்டவர்கள் அவர்கள். அதுவே அவர்களின் நீண்ட ஆரோக்கியமான வாழ்வுக்கும் காரணமாக அமைந்திருந்தது.

பெருநாள்களில் நான் மணம் முடித்துள்ள முஹல்லாவில் தொழுது விட்டு பிறந்த முஹல்லாவிலும் போய் தொழுது நண்பர்களுடன் உறவாடுவது என்எ பெற்றோர்களை ஸியாரத் செய்வது என் வழக்கம். அப்போது மறந்து விடாமல் பேஷ் இமாம் அவர்களை என் கண்கள் தேடும். அவர்களை பார்த்தவுடன் அவர்களும் என்னை எதிர்பார்த்திருந்தவர்கள் போல், ''அட, உன்னைக் காணோமே என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்பார்கள். எங்கள் கரங்கள் இணையும் முஸாபாஹாவுடன் சில சங்கைகளும் நடக்கும். இந்த வருடம் அந்த பாக்கியம் கிடைக்க வில்லை. ஏனோ அவர்களை சென்று பார்க்க நினைத்திருந்தும் கைகூடாமல் போய்விட்டது. உடல் நலம் குன்றியவர்களை உடனே பார்த்து விட்டு வரவேண்டும் என்ற உணர்வுகள் சில நேரம் மழுங்கி விடுகின்றன...எங்கள் தந்தை அவர்களுடன் மர்ஹூம் பேஷ் இமாம் அவர்களுக்கு இருந்த தொடர்பு நேசம் பழைய உறவுகளை பேசிக் கொண்டிருக்கும் பாங்கு என்னை கவர்ந்த காலங்கள் உண்டு...இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.

95 வயது என்று நிறைவான வாழ்வை வாழ்ந்து நூற்றாண்டின் விளிம்பில் நின்று கொண்டு இன்று விடை பெற்றுக் கொண்டு சென்றிருக்கிறார்கள். குருவித்துரைப்பள்ளி, புகாரி ஷரீப் இருக்கும் காலமெல்லாம் பேஷ் இமாம் அவர்களின் பேரும் நிலைத்திருக்கும். என்னதான் 95 வயது வரை வாழ்ந்து மறைந்தாலும் ஒரு குடும்பத்தலைவரை இழந்து விடுவது என்பது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை பொருந்திக் கொள்வானாக. அவர்கள் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக. அவர்கள் மண்ணறையை வெளிச்சமாக்கி விரிவாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மக்கி நூஹுத்தம்பி & மக்கி ஆலிம் குடும்பத்தினர்கள்,
மக்கி ஆலிம் இல்லம் காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [26 January 2017]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 45166

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by SHAJAHAN (DAMMAM) [26 January 2017]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 45167

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. கண் கண்ட இறைநேசர்!
posted by S.K.Salih (Kayalpatnam) [26 January 2017]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 45168

நிகழ்காலத்தில் நம் கண்ணாரக் கண்ட இறைநேசர் இவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது!

இன்று எல்லோராலும் அறியப்பட்ட - கிழக்குப் பகுதியின் எண்ணற்ற ஆலிம்களும், ஹாஃபிழ்களும், நல்லொழுக்கம் நிறையப் பெற்ற சகோதரர்களும் - இந்த மஹானின் அன்பு மாணவர்கள்.

இவர்களது கைவண்ணத்தில் மிளிரும் அரபி எழுத்துக்கள், தரமிக்க ஒரு கலைஞனின் ஓவியம் போன்று இருக்கும். குருவித்துறைப் பள்ளியில் உள்ள பல கிதாபுகளில் இன்றும் அவர்களின் கைவண்ணம் ஒளிர்வதைக் காணலாம்.

காலமெல்லாம் பள்ளிவாசலே தரிப்பிடம் என்றிருந்த அவர்கள், தன் வயோதிகம் - இயலாமை காரணமாக எங்கள் குருவித்துறைப் பள்ளியின் இமாமத் பொறுப்பை விட்டும் விடைபெற்றுக்கொண்டார்கள். என்றாலும், “பேஷ் இமாம்” என்றால் அந்தப் பெயர் நானிருக்கும் வரை எனக்குத்தான்!” என்று உரிமையுடன் கூறுவார்கள்.

இமாம் அவர்கள் சுகவீனத்தால் தன் வீட்டில் ஓய்வெடுத்த காலகட்டத்தில் - என் தாய்மாமா மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் ஆலிம் அவர்கள், என் சிறிய தந்தை கம்பல்பக்ஷ் அல்ஹாஜ் எஸ்.எச்.பாக்கிர் ஸாஹிப் அவர்கள் ஆகியோருடன் இம்மஹானை அவர்களது இல்லத்தில் இருமுறையும், வேறு சில தருணங்களில் தனியாகவும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...

மர்ஹூம் அவர்களது பிரிவால் அவர்களது அன்பு குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [28 January 2017]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45171

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் நம்மைவிட்டு இறையடி சேர்ந்துவிட்ட பேஷ் இமாம் அவர்களின் பெயரை இதுவரை நான்தெரிந்துவைத்திருக்கவில்லை அன்னாரின் மறைவுக்குப்பிறகுதான் அந்தப்புண்ணியவானின் திருநாமத்தை நான் தெரிந்துகொண்டேன் அல்ஹம்துலில்லாஹ்

மூன்றுதலைமுறைகளாக மார்க்கக்கல்விக்கு அரும் தொண்டாற்றிய நமது பேஷ் இமாம் அவர்கள் மறையின் தலையெழுத்து அலி ஃப் முதல் நிறைவசனம்வரை மனநிறைவோடும்,பரிவோடும் மிக எளிமையாக கற்றுத்தருவதில் கைதேந்தவர்கள்ந

மது பேஷ் இமாம் அவர்களிடம் நான் ஓதிவந்த காலத்தில் பன்னிரண்டு வயதுகளாகிவிட்டது மற்றவர்களிக்காட்டிலும் நான்பிந்தங்கியே இருந்தேன் இதைமனோதத்துவ ரீதியாகப்புரிந்துகொண்ட பேஷ் இமாம் அவர்கள் என்னுடையப்பெயரைச்சொல்லி நீ சிறிய சூராக்களை முதலில் பாடமாக்கு என்றுசொல்லித்தந்து எழுத்தக்களை புரியவைத்தார்கள் அல்ஹம்துலில்லாஹ் .

இன்னொரு எனது அறியாமையென்னவென்றால் பேஷ் இமாமென்று அழைக்கப்படுவதற்குக்காரணம் ஃஜபர், ஃஜேர்,பேஷ் இதையெல்லாம் சொல்லத்தருவதால்தான் அவர்களுக்கு பேஷ் இமாம் என்ற பெயரென்று நான்நினைத்துக்கொண்டதுதான் அவர்களின் பெயரை அவர்களின் இவ்வுலுக்க வாழ்வு நிறைவுவரை தெரியாமலிருந்ததற்குக்காரணம் கைர் அந்தப்பெயர் அவர்களுக்கு நம்மனதில் கம்பீரமான மரியாதையை நிலைக்கச்செய்தது எல்லாபுகழு இறைவனுக்கே.

அன்னாரின் வாழ்வு பெரும்பாலும் இறை இல்லம்,தீன் கூடங்கள் விட்டாலே இல்லமாக்க்கி இல்லம் சென்றுவாழ்ந்தார்கள் அதனால் தான் அன்றும் இன்றும் என்றும் நம்மால் பேசப்படும் இமாம் பேஷ் இமாம் ஆனார்கள்,இன்ஷா அல்லாஹ் நிலைத்திருப்பார்கள் நம் மஹல்லாக்களிலும் அவர்கள் ஊரில் பங்குகொண்ட எல்லா நிகழ்வுகளிலும் இனிவரும் நிகழ்வுகளிலும் நினைவுகூறப்படுவார்கள் ஆமீன்

ரஹ்மமானே,ரஹீமே உன்னிடம் வந்துவிட்ட எங்களின் இமாமின் எல்லா நல்லமல்களையும் ஏற்று அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்துவிட்ட தவறு,பாவங்களை மன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் மறுமைநாள்வரை புதுமனகனின் நிம்மதியான உறக்கத்தை கொடுத்து கண்மணி நாயகத்தின் ஷஃபா அத்துடன்,உன்னுடைய அழகுத்தோற்றம் கண்குளிரக்கண்டு நீமுடிவுசெய்துவிட்ட எல்லா கண்ணியங்களுடன் மேலான சுவனத்திலிருக்க அவர்களுக்கும் எங்களுக்கும் நசீபாக்கித்தா ரஹ்மானே ஆமீன்.

அன்னாரின் குடுமபத்தினருக்கு அழகிய பொறுமையுடன்,அமைதியக்கொடுத்தருள்வானாக ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. اللهم اعفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [29 January 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45172

அருமை ஆசான் அவர்களைப் பற்றி ஒரு நீண்ட செய்திகளை இந்த தளத்தில் பதிவு செய்தேன் . ஆனால் இத்தளம் ஒரு குறிப்பிட்ட அளவே எடுத்துக் கொள்வதால் அவர்களைப் பற்றி ஒரு தனி தகவல் கட்டுரையாக பதிவிடலாம் என நாடி சுருக்கமாக இங்கு இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளேன்.

அவர்களின் பிரிவால் வாடும் அவர்கள் உற்றார் உறவினர், அவர்களின் மாணவர்கள் மற்றும் நம் அனைவருக்கும் ஷப்ரன் ஜமீலா எனும் பொறுமையை தந்தருள்வானாக-ஆமீன்

வல்லநாயன் எங்கள் உஸ்தாத் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய ஜன்னத்துல் பிர்தௌஸில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by யஹ்யா முஹியித்தீன் (DUBAI) [30 January 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45176

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم... ‎اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (22/1/2017) [Views - 1866; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved