குவைத் காயல் நல மன்றப் பொதுக்குழுக் கூட்டத்தில், காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் அமைப்பால் நகரில் விரைவில் துவக்கப்படவுள்ள “மக்கள் மருந்தகம் - Generic Medicine” குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
குவைத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி வெள்ளி கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பின் Salmiya வில் மன்ற தலைவர் ஹஸன் மௌலானா அவர்களின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
துவக்கமாக இறை மறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார் இளவல் நெய்னா சாஹிப் (S/o அப்துல் ரஹ்மான் ஷில்லி).
அதனை தொடர்ந்து மன்ற தலைவர் அவர்கள் ஷிபாவின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்து கூறினார். நமதூரில், ஷிபாவின் மூலம் திறக்கப்பட உள்ள Generic Medical Shop பற்றியும், அதன் அவசியத்தை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். குவைத் காயல் நல மன்றம் தங்கள் பங்களிப்பை தரவேண்டும் என்ற தலைவரின் வேண்டுகோலுக்கு இணங்க, Rs 30,000/- பங்களிப்பு செய்வதென தீர்மானிக்க பட்டது.
புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். ஊர் நலன் குறித்து கருத்து பரிமாற்றங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து, நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு ஏதுவாக, நாம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை குறித்து நல்ல பல கருத்துக்களை மன்ற உறுப்பினர்கள் பரிமாறி கொண்டனர். இந்த கருத்து பரிமாற்றங்கள் பயனுள்ளதாக இருந்தது. இன்ஷா அல்லாஹ், இனி வரும் கூட்டங்களில் இது போன்ற ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்துவதென முடிவு எடுக்கப்பட்டது.
இறுதியாக துஆ மற்றும் கஃபாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது அல்ஹம்துலில்லாஹ். இரவு விருந்து உபசரிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
காயல்பட்டினம் மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக
குவைத்திலிருந்து...
ஹாஃபிழ் முஹம்மத் & முஹ்யித்தீன் தம்பி.
|