Re:... posted byNUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH - KSA)[25 January 2017] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45159
கண்ணியத்திற்குரிய எங்கள் ஆசிரிய தந்தை ஷைக் அப்துல்லாஹ் பேஷ் இமாம் அவர்களின் மறைவு அதிர்ச்சியும் மிகுந்த கவலையும் தந்தது.
அவர்கள் ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனம் துவக்கிய காரண கர்த்தா ஆவார்கள் . அருள் மறையாம் திரு குர்ஆனை ஆரம்பம் முதல் இறுதி வரை அன்னவர்களிடமே ஓதி முடித்தேன்.என் போன்ற சக நண்பர்கள் அவர்களிடம் கால் மடித்து குர் ஆன் ஓதுவது மற்றுமல்லாது அடிப்படை மார்க்க கல்வி, தொழுவது எப்படி என்ற முறைகளை சின்னங்சிறு பருவத்தில் பசுமரத்தாணி போல் பதிய வைத்தார்கள்.அதே போன்று ஒழுக்க நெறி முறைகள் போதித்த மகான் . அவர்களிடம் பயின்ற மாணவர்கள் இன்று தலை சிறந்த ஆலிம்களாக ஹாபிழ்களாக இருக்கிறார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னவர்களின் மண்ணறையை பிரகாசமாகி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனபதி புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன்.
எங்கள் உஸ்தாது அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் யாவருக்கும் அல்லாஹ் மேலான ஸபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross